Wednesday, December 16, 2009

கடவுளின் துணை !




பேதமையில் அறிவொழியாய்,
வெற்றியில் உறுதுணையாய் ,
தோல்வியில் ஊக்கமருந்தாய் ,
இருளில் ஜோதியாய் ,
வெயிலில் நிழலாய் ,
அடைமழையில் குடையாய் ,
இடி முழக்கத்தில் சிருஷ்டியாய்,
கண்ணீரில் ஆறுதலாய் ,
சிரிப்பினில் புஷ்பமாய் ,
தனிமையில் பெருந்துணையாய் ,
இதயத்தில் வாசம் பண்ணும் தேவனாய்,
எனக்குள் என்றும் துணையாய் இருக்கிறாய்!

Saturday, December 5, 2009

வாழ்க்கை அழகானது !


முர்களுக்கு நடுவிலும் கூட,
ரோஜா செடி என்றும் அழகு தான் ..
வறண்ட பாலைவனத்திலும் காக்டஸ்
செடி அழகு தான் ..
சுட்டெரிக்கும் சூரியனும்
சுகம் தான் குளிரின் ஆதிக்கத்தின் பொது ..
பாசி படிந்த தண்ணீரிலும் கூட
இலைகளின் தஞ்சம் உண்டு ..
கனியற்ற மரத்திலும் கூட
பறவைகளின் வருகை உண்டு ..
பேய் மலைக்கும் கூட
கடைசி மழைத்துளி உண்டு ..
நம் வாழ்வும் கூட இப்படிதான் ,
நிறைவேறாத கனவுகளும் என்றோ ஒரு நாள் நிஜங்களாகும் ..
சாத்தியமற்ற முயற்சியும் ஒரு நாள் உயிர் பெரும்..
கவலைகளும் முகவரி இன்றி மறையும் ..
வாழ்வின் விழியில் ஒளிந்து கொண்டிருக்கும் அழகை
விழித்து ஆராயுங்கள் ..
வாழ்வை காதலிப்பிர்கள்..
வெறுப்பாய் தோன்றும் வாழ்வும் கூட
இனிமையாய் மாறும் ,
நரகமான தருணங்களும்
சொர்க்கமாய் தோன்றும் ,
வாழ்வின் மீது நாம் கொண்டுள்ள பார்வையை வேறுபடுத்தினால்!

Sunday, November 22, 2009

மழை !


மண்ணின் மீது கொண்ட காதலால் ,
மழை வந்தது !
மழையின் வருகையால்
பூமியின் ஜனனம் இங்கே ,
மேகமோ வீழ்ந்தது
மழையின் பிரிவால் அங்கே,
இப்படி தான் என் வாழ்வும் கூட
நான் வாழ்வதும் வீழ்வதும் உன்னாலே !!

Wednesday, November 18, 2009

வந்தாய் நட்பாய்!


கேட்காமலே நனைத்துவிட்ட
மழைத்துளியை போல் ,
உதிர்ந்த பின்பும் மரமிடையே
மீண்டும் புதிதாய் பூக்கும் பூக்களை போல் ,
சங்கில் சத்தமின்றி நுழையும்
காற்றை போல் ,
புல்லிதழில் புறப்பட்ட பனித்துளியின்
யாத்திரையை போல் ,
சரிந்த பின்பும் சுவாசம் உட்புக
ஆடும் மரங்களை போல் ,
இதழ்கள் அசைக்காமலே
மனதில் கேட்கும் இசையை போல் ,
ஓசைகள் ஏதுமின்றி ,
அழைப்புகள் ஏதுமின்றி ,
ஆசைகள் ஏதுமின்றி ,
கனவுகள் ஏதுமின்றி ,
எதிர்பாராத புயலாய் வந்தாய் ..
ஒழிந்திருந்த கனவுகள் எல்லாம்
கைகூடி மத்தாளம் போட்டு நிஜங்களாகும் வண்ணம் ,
நிராசைகளெல்லாம் நிறைவேறும் வண்ணம் ,
செவிடானாலும் உன் ஓசைகள் கேட்கும் வண்ணம் ,
கண்ணீரிலும் என் இதழ்கள் சிரிக்கும் வண்ணம் ,
வந்தாய் என் வாழ்வில் நட்பாய்!
வாழ்வை மாற்றினாய் தித்திப்பாய் !
இப்படியே உரைந்திட ஏங்கிடும் ,கனவாய்!
நம் அன்பென்னும் யாத்திரை
என்றும் தொடரும் மகிழ்ச்சியாய்!

Sunday, November 15, 2009


அண்மையில் ஒரு வார இதழில் படித்தேன் ஒரு நிகழ்வை..அதில் என் மனதில் தோன்றிய கவிதை இது ...

நாம் காதாலர்கள் அல்ல
எனினும்
அழிவில்லாத அன்பை பரிமாறிக்கொள்கிறோம் !
உறவின் ஆயுளை நாம் அறியோம்
எனினும் நம் ஆயுளின் எல்லையை கடந்த புரிதலை பகிர்கிறோம் !
மண்ணின் மீது கொண்ட காதலால்,
பூக்கள் உதிர்வதை போல ,
நாமும் பல முறை சருகுகளாய் வீழ்கிறோம் !
இலையுதிர் காலம் என எண்ணி
மறுபடியும் பூக்கிறோம் புதிதாய் !
நம் கவுகள் நிகழ்வுகளாகி,
நிகழ்வுகள் நினைவுகளாகி,
நினைவுகள் முத்திரையாகியும் கூட
பயணிக்கிறோம் ..
நாம் நண்பர்களா ? காதலர்களா ?
என்ற வினாவிற்கு விடை கிடைக்காத புதிராய் !

நீ

நேசிக்கும் உறவாய் நீ ,
சுவாசிக்கும் காற்றாய் நீ,
ரசிக்கும் இசையாய் நீ ,
உணரும் ஸ்வரமாய் நீ,
கனவுகளின் கருவாய் நீ,
மௌனத்தின் மொழியாய் நீ ,
என் எழுத்துக்களின் மூலாதாரமாய் நீ,
என் புன்னகையின் பிறப்பிடமாய் நீ,
என் கண்ணீரின் முடிவாய் நீ,
என் இதயத்தின் துடிப்பாய் நீ ,
நீ இன்றி நான் ஏது?
நாம் இன்றி வாழ்வேது ?

Saturday, November 7, 2009

காலை நேரம்


அழகான காலை வேளை,
ஜன்னலின் வழியே சூரிய ஒளியின்,
மிதமான ஸ்பரிசம் !
வானிலே மிதக்கும் மேகக் கூட்டங்கள்!
விடிந்தும் பிரிய மனமின்றி
இருக்கும் நிலவு!
சற்றும் ஓயாமல் துரு துருவென
சுற்றி திரியும் பறவை கூட்டங்கள்!
விண்மீன் கூட்டங்கள் ஒளியில் மங்கினாலும் ,
வானிற்கு வண்ணங்கள் சேர்க்கும் முயற்சியில் !
இயல்பினை மறந்தேன்
இவை அனைத்தின் வருடலில் !
காயப்பட்ட இதயத்திற்கோ இவைகள்
அறிய மருந்து!
மோட்சம் பெறாத விழிகளுக்கோ ,
இவைகள் அறிய விருந்து !

தேடலில் தொலைத்தேன்!


உன்னை பற்றி எழுத நினைத்தேன் ,
பேனா நுனியும் மயிலிறகு ஆனது ...
உன்னை காண நிலவை தேடினேன் ,
என் சோகத்திற்கு ஏற்ப ,
அமாவாசை ஆனது ..
வானத்தில் உன்னை தேடியே ,
மேகமும் என்னுடன் கண்ணீரை சிந்துதோ ?
உன்னை தேடிய வியப்பில் தான்
கடல் அலையும் ஓய்ந்ததோ ?
பலமுறை தேடியும்
உன்னை தொலைத்தேன் !
தேடலில் மட்டுமே ..
நினைவுகளில் அல்ல !!!

Thursday, November 5, 2009

மழைக் காதல்!-படித்ததில் பிடித்தது




நீ குடை விரிப்பதற்குள்
உன்னை தொட்டு விட்ட
மழைத்துளிகளை பார்த்து,
இன்னும் கறுத்தது வானம்,
என் முகமும் தான்...

Saturday, October 24, 2009

காதலர்களின் பொய்கள் !




பிரிவின் தாக்கத்தின் போதும் ,
கண்கள் கலங்கும் போதும் ,
கண்ணில் தூசி விழுந்து விட்டது என்ற பொய் !
நினைவுகளின் தாக்கத்தால்
கனவுகளின் தொல்லையால்
விழித்திருந்துவிட்டு
தூக்கமில்லை என்ற பொய் !
சண்டை சச்சரவுகளில் இருந்துவிட்டு ,
ஏன் சோகமாய் இருகிறாய் என்று கேட்கும் தோழியிடம் ,
மனசு சரி இல்லை என்ற பொய் !
எத்தனை பொய்கள் தான் கூறுவாய்
என்று கேட்கும் மனதிடம்
என் காதலை மறக்கும் வரை
என்று மனதிடமும் பொய் !
காதல் மெய்யாகும் போது
பொய்களும் மெய்யாகுமே !

Monday, October 19, 2009

நட்பு !காதல் !




முன்னுரை இன்றி தோன்றும் காதலுக்கும் ,
முன்னுரையோடு தோன்றும் நட்புக்கும் ,
வேறுபாடு ஒன்று மட்டுமே !
காதல் முடிவுரை ஆனால் நட்பின் முகவரி தோன்றும் .
நட்பு முடிவுரை ஆனால் ஆயுளின்
முகவரியே தொலைந்து விடும்!!

Sunday, October 11, 2009

விமான பயணம்!



முதல் முறையாய் பூமியை கண்டேன்
பல வண்ணங்களில்
நான் உன்னுள் இருந்த போது!
என் செவிகளும் செயல் இழப்பதை உணர்ந்தேன்
பூமியை விட்டு பிரிந்து சென்ற போது!
விண்ணில் பறப்பது போன்ற உணர்ச்சி
உன்னுள் இருந்த அந்த சில நொடிகள் !
வாழ்வை இன்னும் அழகாய் மாற்றிய தருணம் அவை !
என்றும் மாறாத முத்திரையாய் பதிந்தது
என் முதல் விமான பயணம் !

இயற்கையின் அழகு !




யாரும் இல்லாத அமைதியான சாலை ,
மௌனத்தை கலைக்கும் வண்ணம்
சாலையில் ஊடுருவிய வாகன சப்தம் !
ஜன்னலை மூட மனம் இல்லை
தென்றலின் ஸ்பரிசத்தில் லயித்து போனதால் !
பௌர்ணமி ஆன அன்று ,
ஹய்யோ இதுவரை நான் பார்த்திடாத அழகை கண்டேன் நிலவில் !
ஒளியற்ற புல்வெளியை சூரியன்
மெருகூட்டுவது போல
அந்த மௌனமான சாலையை
மெருகூட்டியது வாகனத்தின் ஒளி!
சற்றும் எதிர் பார்க்காத வண்ணம்
மேகம் என்னை காண துடித்ததினால்
மழையை தூதாக அனுப்பியது !!
ஆகா மழை தான் எத்தனை அழகு ?!
சாலை ஓர மரங்களின் ஓயா நடனத்தின் அழகு தான் எத்தனை?!
இவற்றின் அபிநயத்தில் தொலைத்தேன் என்னை
என்னை மட்டும் அல்ல என்னில் இருந்த பாரங்களையும் தான் !!

Monday, September 28, 2009

Take care




Three things in life that, once gone, never come back -

(1)- Time
(2)- Embedded Words
(3)- Opportunity

Three things in life that may never be lost -

(1)- Peace
(2)- Hope
(3)- Honesty

Three things in life that are most valuable -

(1)- Love
(2)- Self-confidence
(3)- Friends

Three things in life that are never certain -

(1)- Dreams
(2)- Success
(3)- Fortune

Three things that make a man/woman -

(1)- Hard work
(2)- Sincerity
(3)- commitment

Three things in life that can destroy a man/woman -

(1)- Alcohol
(2)- Pride
(3)- Anger

Three things in life that, once lost, hard to build-up -

(1)- Respect
(2)- Trust
(3)- Friendship

Three things in life that never fail -

(1)- True love
(2)- Determination
(3)- Belief

Take care of these things ..

Thursday, September 24, 2009

இயலாமை !



நிதமும் உன்னை பார்க்கிறேன் ,
பொழுது தவறாமல் !
நீ துயிலுவதில் இருந்து
அதிகாலையில் எழும் வரை
உன்னை காண்கிறேன் !
என்னில் விழும் முதல் பிம்பம்
உன்னுடையதுதான் !
என் இயலாமையை மீறியும்
உன்னை கட்டி அனைக்கதோன்றும்
அழகாய் என் முன்னிலையில்
நீ நிற்கும் பொழுது !
உன் கலைந்த கூந்தலின் அசைவுகள் ,
உன் வேடிக்கையான நடன கூற்றுகள் ,
இவ்வளவு ஏன்??
நீ பாடுவதை கூட உணர்ந்திருக்கிறேன் !
நீ பிறரிடம் பேசமுடியாத கோடி சொற்களை ,
என் முன் வந்து பேசுவாய் ஆவேசமாய் ..
எனினும் என் செவிகள்
ஒரு போதும் மூடியதில்லை !!
ஏனோ என்னை விட்டு பிரிய
உன்னுள்ளே ஆயிரம் விண்ணப்பங்கள் ?
செல்வதற்கு முன் பலமுறை என் பார்வையில் விழுகிறாய் !!
இவைஅனைத்தையும் எண்ணி பெருமிதம் என்னுள்..
ஆனால்
நீ என்னிடம் வந்து கதறி அழுகையில் ,
என் கரங்களை நீட்டி உன்னை அணைக்க முடியவில்லையே
உன் கண்ணீரை அகற்ற ,ஆறுதலாக பேச துடித்தேன்
ஆனால் முடியவில்லையே!!
உன்னுடன் கைகோர்த்து நடக்க முடியாத ,
உயிரில்லாத ஒரு கேடயம் ஆனேனே ?!
ஏன்?!?
கண்ணாடியாக பிறந்ததனால் !!

அழுகுரல் !



பிறந்தேன் நானும் கெம்பீரமாய் ,
தாயின் ஸ்பரிசத்தில் ,
தந்தையின் அரவணைப்பில் ,
தொடர்ந்தது என் ஆயுட்காலம் ..
கண்டேன் வானவில்லை பலமுறை
அழகிய வண்ணங்களில் !
ஒருமுறை கூட என் ஆடையில்
வண்ணங்களை கண்டதில்லை ..
நடைபிணமாக திரிந்தேன் !
செவியில் குப்பைத்தொட்டியின் பெருமிதக் குரல்
ஓரமாக என்னை சுற்றி இத்தனை இழைகள் என !!
அப்பொழுது தான் இரு தினங்கள் உண்ணாமல் ஓய்ந்ததை உணர்ந்தேன் !!
வீட்டு ஜன்னல்களில் ஆயிரம் சட்டைகள் ,
கண்டேன் என் சட்டையில் ஆயிரம் ஜன்னல்களை !
மனதில் கட்டினேன் ஆயிரம்கோடி கனவுகள்
வறுமை கட்டியது என் கனவுகளை !!
சிறகு முளைத்து பறக்க ஆசைதான்
என் ஏழ்மை என்னைவிட்டு பறந்தால் !!
வேண்டுவது ராஜாங்க வாழ்வை அல்ல
வாழ்வை போராட்டமாக அல்லாமல் ,
உணர்ந்து வாழ ஒரு வறுமை இல்லாத வாழ்வை மட்டுமே !!
--ஒரு ஏழை சிறுவனின் அழுகுரல்


Tuesday, September 22, 2009

சொல்லப்படாத காதல் !




உன் விழியினில் என் பிம்பம்
தெரிந்தபோது உணர்ந்தேன்
உன் பார்வையில் நான் உரைந்திருக்கிறேன் என்பதை !
நாம் பேசிய ஆயிரம்கோடி வார்த்தைகளின்
நடுவில் துளிர்விட்ட உனது சிறிய
மௌனத்தில் ,
உன் விழிகள் பேசிய ஆயிரம்கோடி மொழியில் ,
உணர்ந்தேன் எனக்கான உன் காதலை !
பிரியும் வேளையில் உன் கண்களின் ஓரம்
கசியும் கண்ணீர் துளியில் உணர்ந்தேன்
உன் கண்ணீரில் கூட என் உயிர் உலவுவதை !
நிகழ்வுகளை விழி மூடி யோசித்தபோது உணர்ந்தேன்
இருளை அல்ல
உன் பிம்பம் என் நினைவுகளிலும் ஊடுருவதை !
காதலை சொல்லாமல் கொள்ளாமல்
பயணிக்கும் காதலர்களாய் !!

Sunday, September 20, 2009

நான் மிகவும் ரசித்த கடல் !!




காற்று பலமாக வீசியது ,
தென்றல் தீண்டியது ,
சிறு மழை துளிகள் பெரு மழை ஆகிய தருணம் ,
அலைகள் வந்து தீண்ட காத்திருந்தேன் கரையில் ..
சில நொடியில் அலைகளோடே இணைந்து விடுவேன்
என்பதை அறியாமலே !
கடலே ,
சிப்பி உயிர் கொடுத்த முத்துக்களின் பிறப்பிடமாய் ,
பல உயிரினங்களுக்கு பிறப்பிடமாய் ,
பல காதலர்களின் காதலுக்கு பிறப்பிடமாய் ,
இருந்த நீ ,
பல மனிதர்களுக்கு இறபிடமாயும் ஆனாயே !
வசந்தம் மட்டுமே வந்த உனது பாதையில் ,
சுனாமி என்னும் புயலும் வீசியதே .
கசக்கும் நினைவுகளை கொடுத்துவிட்டு சென்றதே..
உனக்குள் ஏன் இந்த வெறி ??
ஒரு வேளை நீ மகிழ்ச்சியாய் இருப்பதால் தான்
கொந்தளிக்கிறாயா ?
இல்லை
உன்னை தீண்டும் மனிதர்களை ,
தடுப்பதற்கு கொந்தளிக்கிறாயா ?
கொந்தளி வேண்டாம் என சொல்லவில்லை ..
எங்களின் துன்பம் கொந்தளிக்காத வரை கொந்தளி..
கசக்கும் நினிவுகளை கொடுத்து சென்றாய் ..
எனினும் உன் அபிநயத்தில் மயங்கி ,
கசக்கும் நினைவுகளை மறந்து ,
மீண்டும் அலைகள் வந்து தீண்ட காத்திருகின்றேன்
நீ அடித்து செல்ல மாட்டாய் என்ற நம்பிக்கையில் ?!!

காதல் !




காதலை சொல்ல தவித்த நாட்கள் அவை
சொல்ல தைரியமின்றி ,,,

அலைகளை அனுப்பினேன்
அலைகளும் உன்னை பார்த்து
சொல்ல முன்வந்து வந்து பின் வாங்கின

சரி என்று

மேகத்தை அனுப்பினேன்
மேகமும் உன்னிடம் காதலை சொல்ல முடியாமல்
மழையாய் பொழிந்தது

சரி என்று

புறாக்களை அனுப்பினேன்
புறாக்களும் உன்னை தவிர வேறு எல்லா இடத்துக்கும்
பறந்தது

சொல்ல வார்த்தைகள் இன்றி
தவித்து கொண்டிருந்தேன்

ஒரு நாள் தைரியம் பிறந்தது
ஒரு மேகம் சூழ்ந்த நாளில்
உன்னை நோக்கி
உன் பாதைகளை
பின் தொடர்ந்து
நடந்து வந்தேன்

நடந்து கொண்டிருக்கும் வேளையில்
சற்றென்று மழை பெய்தது ...

நீ திரும்பி பார்த்தாய்
நீ என்னை அழைத்தாய்
மழை நம்மை குடைக்குள் இணைத்தது...

இடி நம் கரங்களை
இருக்க பிடிக்க செய்தது ..

மழைக்கு நன்றி கூறிய வாறே
எப்படி சொல்ல என்று
யோசித்து கொண்டிருந்த வேளையில் ,,,
நீ சற்றும் பதறாமல்
பயபடாதே என்று உன் அழகிய குரலில் கூறினாய்

நம் நடை பயணம் முடிவடையும் வேளையில்
அன்றும் சொல்ல முடியாமல் போனதே
என்று எண்ணி உன்னை பார்த்தேன்

நீ சிறிய மௌனத்திற்கு பின்
நம் காதலை இணைத்த மழை மீண்டும்
வர ஆசை என்று கூறினாய்..
அப்போது தான் உனக்குள்ளும் காதல் இருந்ததை உணர்ந்தேன் ...

நீ சொன்னதை கேட்டதும் இன்ப அதிர்ச்சி
வாகனங்களின் சப்தம் கூட இசையாய் ஒலித்தது ...

வீடு திரும்பியதும் , ,,
அன்றைய பொழுது முடிவதில் ஏனோ தயக்கம்
உறக்கத்தில் கண்களை மூடினேன்
ஆகினும் இதய துடிப்பு உனக்காகவே துடித்தது ...

அப்போது உணர்ந்தேன்
சொல்ல மறந்த காதல் ஆகிவிடுமோ
என்று தவித்த வேளையில் ,,,
சொன்னால் தான் காதல் என்பதை
அறிந்திருந்தால்
இன்னும் அதிகம் நாள்
உன்னுடன் காதல் வாழ்வில் வாழ்ந்திருக்கலாமே என்று !!

வாழ்க்கையை காதலிப்போமே!




அன்றாட வாழ்வில்
விழிக்க மறுக்கும் விழிகளுடன்
போராட்டத்தை வென்று
இமைகளை துறந்து,
மீண்டும் ஒரு புதிய நாளின் பயணத்தில் ,
பார்வையில் ஒரு புதிய தேடல்,
கால்களில் புதிய ஓட்டம்,
மனதினில் பலவித வாக்குவாதங்கள்
என நாட்கள் நகர்கிறது ..
இத்தனை பரபரப்பில்
இயற்கையின் அழகு,
சூரியனின் வருகை ,
பூக்களின் மலர்ச்சி,
வயல்வெளியின் பசுமை ,
சாலையோர பூக்கள் ,
மெருகூட்டும் மலைச்சாரல் ,
மெல்லத்தலுவும் தென்றல் ,
பறவையின் ஓசைகள் ,
பூக்களின் மொழிகள் ,
மேககூடங்களின் ஒற்றுமை ,
கோவில் மணி ஓசை ,
வானவில்லின் வண்ணச் செழிப்பு ,
வண்ணத்து பூச்சியின் அழகு ,
மழலையின் சிரிப்பு ,
முகம் தெரியாதவர்களின் புன்னகை ,
எதிர்பாராத சந்திப்பு ,
சூரியன் மறையும் போது இன்னொரு நிற வானின் பிறப்பு,
நிலவின் சிரிப்பு ,
கண்ணடிக்கும் நட்சத்திர கூட்டங்கள் ,
அபூர்வமாக தோன்றும் வான வேடிக்கைகள் ,
வாழ்வின் அழகு தான் எத்தனை ?!?!?!
வாழ்வின் அழகிய தருணங்கள் இவை தானோ?
நின்று பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருக்கிறோம் ...
அழகை ஆராதிக்க ,
இயற்கையை வர்ணிக்க ,
ஒரு நொடி உலகம் நின்றது என எண்ணி
திரும்பி பார்ப்போமே!!
உயிரோடு இருக்கும் இந்த பிரபஞ்சத்தில் ,
வாழ்கையை காதலிபோமே !!
சில நோடிகலாது துக்கங்களை மறந்து !!

Thursday, September 17, 2009

எப்படி உணர்த்துவேன்?!




இமைக்க மறுக்கும் என் இமைகளுக்கு
எப்படி புரியவைப்பேன்
கண்ணுக்கு எட்டும் தொலைவில் ,
நீ இல்லை என்பதை !!
என் துயிலைக் கெடுக்கும்
கனவுகளுக்கு
எப்படி புரிய வைப்பேன்
நினைவுகளில் தொலைத்ததை
கனவுகளில் மீட்க முடியாதென்பதை !!!
நீ பேசிய வார்த்தைகளை
சேகரித்த செவிகளுக்கு
எப்படி உணர்த்துவேன்
அவை தொலைந்து போன சொற்கள் என ?!!
துடித்து கொண்டே இருக்கும்
என் இதயத்திற்கு
எங்ஞனம் கூறுவேன்
அதன் ஆயுள்காலம் முடிந்து விட்டது என்பதை !!
நிகழ்வுகளை மறக்க நினைக்கிறேன்
இவைகளோ மறப்பதை மறுக்க நினைக்கிறதே !!



Sunday, September 13, 2009

படித்ததில் பிடித்தது-இமைகளை மூடாதீர்கள்





நான் இறந்த பிறகு
என் இமைகளை
மூடிவிடாதீர்கள் !
திறந்தே வையுங்கள்
அவள் வந்தாலும் வருவாள்
என் இறுதி ஊர்வலத்தைக்
காண்பதற்கு !
ஒரு சமயம் அவள் வந்தால்
விலகி நில்லுங்கள்
என் விழிகளில் விழும்
இறுதி பிம்பம்
அவளுடையதாய் இருக்கட்டும் !

Friday, September 4, 2009

நீ வருவாய் என!!

நீ சென்ற வழிபாதையில் ,
என் விழிப்பயணத்தை
தினம் தொடருகிறேன் !!
நீ எப்போது மீண்டும் வருவாயென்று!
விழிகளுக்குஉள்ளே போராட்டம் இமைக்கலாம வேண்டாமா என ?
ஏனெனில் இமைக்கும் பொழுது
ஒரு வேளை நீ வந்து மறைந்து விட்டால் ?!!
இமைக்க மறுக்கும் விழிகளின் தாக்கத்தில் !!!

natpu!!







Thursday, September 3, 2009

அம்மா






கருவறையில் உயிர் கொடுத்தாய் ...
உன் கருவிழியில் என்னை நிறைத்து ...
கண்களை காக்கும் இமைகளாக உள்ளாய் ..
உன் அன்பு கவலைகளை ,
சுவாசிக்க மற்றும் அல்ல
நேசிக்கவும் கூட தான் கற்று கொடுத்தது ....
தாயில் சிறந்ததோர் கோவில் இல்லை
என்று சொல்வார்கள் ,
என் கண் கண்ட தெய்வம் நீ தானே அம்மா !!
உன் கரம் கோர்த்து நடை பயின்றேன் ,
என் சுவாசம் என்னை விட்டு பிரிய பயிலும் வரை,
என்றென்றும் இருப்பேன் உன்னுடன் ..
என்றும் மாறாத என் அன்புடன் !

Saturday, August 29, 2009

நினைவுகளின் பயணத்தில் !!


மேகமாய் இருந்து என் கண்ணீரை
உன்னுள் அடைத்தாய்...

கவிதையாய் தோன்றி நான் சொல்ல
தவறிய வார்த்தைகளை
சொற்களாய் பொலிந்தாய்...

மழையாய் மாறி என்னை
உன் அன்பு மழையில் நனைத்தாய்...

வானவில்லாய் மாறி
உயிரிழந்த என் வாழ்விற்கு
வண்ணங்கள் சேர்த்தாய்...

கடலாய் மாறி
ஓய்ந்து போன என் உள்ளத்தில்
அலையாய் எழுந்து
என்னையும் எலவைத்தாய்...

சிறை செய்து வைத்த
என் எண்ணங்களை
பறவையாய் மாறி
பறக்க விட்டாய்...

தனிமையில் தவித்த தருணங்களில்
கனவாய் தோன்றி
என் தனிமையை போக்கினாய்...

கவலை சூழ்ந்த வேளையில்
மலராய் மாறி
வாழ்விற்கு வசந்தம் தந்தாய்...

நான் சொல்லாமலே
என்னை அறிந்திருந்த நீ ,,,,
எப்போதும் நீ என்னுடன் இருக்க வேண்டும் என்று நான்
சிந்திப்பதையும் அறிந்து
என்னுடன் இருப்பாய்
என்று எண்ணினேன்
என்னோ சில கஷ்டத்தில்
என்னை நீ பிரிந்து சென்றாய் !!!!!
அப்பொழுதும் கூட என்
துயரத்தை அறிந்திருந்த நீ ,
பிரிந்து சென்றாலும் கூட ,
உன் நினைவுகளை என்னிடம் விட்டுச் சென்றாய் !!!
உன் நினைவுகள் போதும்
பல யுகம் வாழ்வதற்கு !!!
என்றும் உன் நினைவுகளுடனே பயணிக்கிறேன் !!

Thursday, August 27, 2009

முதியோர் இல்லம்




பசுமைச் செழிப்போடு வாழ்ந்தோம் அன்று
இன்றோ உதிர்ந்து போன சருகுகளாய் வாழ்கின்றோம்
நீ தேடி வந்து வாழ்த்துக்கள் பெற்ற காலங்கள் அவை
கண் எதிரே தோன்றி விடாதே என்று
நீ வாழ்த்தும் காலங்கள் இவை .
ஒரு மனிகூருக்கு பல முறை
நீ என்னை அழைத்த நொடிகள் நெஞ்சில்
நிற்கிறது
ஆனால் இன்றோ .......
மர கிளைகள் கூட என்னை
கை விரித்து அழைக்கிறது
மேகம் கூட எனக்காய் கண்ணீர் சிந்துகிறது
நிலவு கூட முகம் காட்டி புன்னகைக்கிறது
எனினும் ஒரு சலனம் கூட உன்னில் இல்லையே ,,
ஒரு முறை கூட என்னை
அழைக்கவில்லையே
உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வதில்
முன்னுரையாய் இருந்தேன் ,,,,,
நான் சற்றும் எதிர் பார்க்க வில்லை ,,,,
நான் சொர்க்கத்திற்கு முன்னுரை ஆகும் முன் ,,,,,,
உன் வாழ்வில் முடிவுரை ஆவேன் என்று
உன் அருகாமையில் இறுதி வரை
வாழ கனா கண்டேன் ,,
நீயோ என்னை முதியோர் இல்லத்தில்
கொண்டு சேர்க்க கனா கண்டு
இருந்துருகிறாய்
இப்போது நான் ஏங்குவது உன் அருகாமைக்காக அல்ல
உன் பணத்திற்காக அல்ல
உன் அடைக்கலதிற்காக அல்ல
உன் கண்ணீருக்காக அல்ல
அந்த ஒரே ஒரு சொல் அம்மா
என்று நீ என்னை ஒரு முறையாவது
அழைப்பதர்க்காக ஏங்குகிறேன் ...
ஒரு முறை அம்மா உன்னை
நேசிக்கிறேன் என்று கூறிவிடு
அந்த ஒரு சொல்லில் நான் உயிர் துறப்பேன்