Thursday, September 24, 2009

அழுகுரல் !



பிறந்தேன் நானும் கெம்பீரமாய் ,
தாயின் ஸ்பரிசத்தில் ,
தந்தையின் அரவணைப்பில் ,
தொடர்ந்தது என் ஆயுட்காலம் ..
கண்டேன் வானவில்லை பலமுறை
அழகிய வண்ணங்களில் !
ஒருமுறை கூட என் ஆடையில்
வண்ணங்களை கண்டதில்லை ..
நடைபிணமாக திரிந்தேன் !
செவியில் குப்பைத்தொட்டியின் பெருமிதக் குரல்
ஓரமாக என்னை சுற்றி இத்தனை இழைகள் என !!
அப்பொழுது தான் இரு தினங்கள் உண்ணாமல் ஓய்ந்ததை உணர்ந்தேன் !!
வீட்டு ஜன்னல்களில் ஆயிரம் சட்டைகள் ,
கண்டேன் என் சட்டையில் ஆயிரம் ஜன்னல்களை !
மனதில் கட்டினேன் ஆயிரம்கோடி கனவுகள்
வறுமை கட்டியது என் கனவுகளை !!
சிறகு முளைத்து பறக்க ஆசைதான்
என் ஏழ்மை என்னைவிட்டு பறந்தால் !!
வேண்டுவது ராஜாங்க வாழ்வை அல்ல
வாழ்வை போராட்டமாக அல்லாமல் ,
உணர்ந்து வாழ ஒரு வறுமை இல்லாத வாழ்வை மட்டுமே !!
--ஒரு ஏழை சிறுவனின் அழுகுரல்


No comments:

Post a Comment