Thursday, September 24, 2009

இயலாமை !



நிதமும் உன்னை பார்க்கிறேன் ,
பொழுது தவறாமல் !
நீ துயிலுவதில் இருந்து
அதிகாலையில் எழும் வரை
உன்னை காண்கிறேன் !
என்னில் விழும் முதல் பிம்பம்
உன்னுடையதுதான் !
என் இயலாமையை மீறியும்
உன்னை கட்டி அனைக்கதோன்றும்
அழகாய் என் முன்னிலையில்
நீ நிற்கும் பொழுது !
உன் கலைந்த கூந்தலின் அசைவுகள் ,
உன் வேடிக்கையான நடன கூற்றுகள் ,
இவ்வளவு ஏன்??
நீ பாடுவதை கூட உணர்ந்திருக்கிறேன் !
நீ பிறரிடம் பேசமுடியாத கோடி சொற்களை ,
என் முன் வந்து பேசுவாய் ஆவேசமாய் ..
எனினும் என் செவிகள்
ஒரு போதும் மூடியதில்லை !!
ஏனோ என்னை விட்டு பிரிய
உன்னுள்ளே ஆயிரம் விண்ணப்பங்கள் ?
செல்வதற்கு முன் பலமுறை என் பார்வையில் விழுகிறாய் !!
இவைஅனைத்தையும் எண்ணி பெருமிதம் என்னுள்..
ஆனால்
நீ என்னிடம் வந்து கதறி அழுகையில் ,
என் கரங்களை நீட்டி உன்னை அணைக்க முடியவில்லையே
உன் கண்ணீரை அகற்ற ,ஆறுதலாக பேச துடித்தேன்
ஆனால் முடியவில்லையே!!
உன்னுடன் கைகோர்த்து நடக்க முடியாத ,
உயிரில்லாத ஒரு கேடயம் ஆனேனே ?!
ஏன்?!?
கண்ணாடியாக பிறந்ததனால் !!

1 comment:

  1. Reallyy.. reallyy.. gr88..!

    unmayai pradhibalippadhu thavaru than!!
    anubavikatum kannadi!!

    ReplyDelete