பசுமைச் செழிப்போடு வாழ்ந்தோம் அன்று
இன்றோ உதிர்ந்து போன சருகுகளாய் வாழ்கின்றோம்
நீ தேடி வந்து வாழ்த்துக்கள் பெற்ற காலங்கள் அவை
கண் எதிரே தோன்றி விடாதே என்று
நீ வாழ்த்தும் காலங்கள் இவை .
ஒரு மனிகூருக்கு பல முறை
நீ என்னை அழைத்த நொடிகள் நெஞ்சில்
நிற்கிறது
ஆனால் இன்றோ .......
மர கிளைகள் கூட என்னை
கை விரித்து அழைக்கிறது
மேகம் கூட எனக்காய் கண்ணீர் சிந்துகிறது
நிலவு கூட முகம் காட்டி புன்னகைக்கிறது
எனினும் ஒரு சலனம் கூட உன்னில் இல்லையே ,,
ஒரு முறை கூட என்னை
அழைக்கவில்லையே
உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வதில்
முன்னுரையாய் இருந்தேன் ,,,,,
நான் சற்றும் எதிர் பார்க்க வில்லை ,,,,
நான் சொர்க்கத்திற்கு முன்னுரை ஆகும் முன் ,,,,,,
உன் வாழ்வில் முடிவுரை ஆவேன் என்று
உன் அருகாமையில் இறுதி வரை
வாழ கனா கண்டேன் ,,
நீயோ என்னை முதியோர் இல்லத்தில்
கொண்டு சேர்க்க கனா கண்டு
இருந்துருகிறாய்
இப்போது நான் ஏங்குவது உன் அருகாமைக்காக அல்ல
உன் பணத்திற்காக அல்ல
உன் அடைக்கலதிற்காக அல்ல
உன் கண்ணீருக்காக அல்ல
அந்த ஒரே ஒரு சொல் அம்மா
என்று நீ என்னை ஒரு முறையாவது
அழைப்பதர்க்காக ஏங்குகிறேன் ...
ஒரு முறை அம்மா உன்னை
நேசிக்கிறேன் என்று கூறிவிடு
அந்த ஒரு சொல்லில் நான் உயிர் துறப்பேன்
No comments:
Post a Comment