இமைக்க மறுக்கும் என் இமைகளுக்கு
எப்படி புரியவைப்பேன்
கண்ணுக்கு எட்டும் தொலைவில் ,
நீ இல்லை என்பதை !!
என் துயிலைக் கெடுக்கும்
கனவுகளுக்கு
எப்படி புரிய வைப்பேன்
நினைவுகளில் தொலைத்ததை
கனவுகளில் மீட்க முடியாதென்பதை !!!
நீ பேசிய வார்த்தைகளை
சேகரித்த செவிகளுக்கு
எப்படி உணர்த்துவேன்
அவை தொலைந்து போன சொற்கள் என ?!!
துடித்து கொண்டே இருக்கும்
என் இதயத்திற்கு
எங்ஞனம் கூறுவேன்
அதன் ஆயுள்காலம் முடிந்து விட்டது என்பதை !!
நிகழ்வுகளை மறக்க நினைக்கிறேன்
இவைகளோ மறப்பதை மறுக்க நினைக்கிறதே !!
/// நீ பேசிய வார்த்தைகளை
ReplyDeleteசேகரித்த செவிகளுக்கு
எப்படி உணர்த்துவேன்
அவை தொலைந்து போன சொற்கள் என ?!! ///
expressive lines..
very nice,,
thank you :-)
ReplyDelete