யாரும் இல்லாத அமைதியான சாலை ,
மௌனத்தை கலைக்கும் வண்ணம்
சாலையில் ஊடுருவிய வாகன சப்தம் !
ஜன்னலை மூட மனம் இல்லை
தென்றலின் ஸ்பரிசத்தில் லயித்து போனதால் !
பௌர்ணமி ஆன அன்று ,
ஹய்யோ இதுவரை நான் பார்த்திடாத அழகை கண்டேன் நிலவில் !
ஒளியற்ற புல்வெளியை சூரியன்
மெருகூட்டுவது போல
அந்த மௌனமான சாலையை
மெருகூட்டியது வாகனத்தின் ஒளி!
சற்றும் எதிர் பார்க்காத வண்ணம்
மேகம் என்னை காண துடித்ததினால்
மழையை தூதாக அனுப்பியது !!
ஆகா மழை தான் எத்தனை அழகு ?!
சாலை ஓர மரங்களின் ஓயா நடனத்தின் அழகு தான் எத்தனை?!
இவற்றின் அபிநயத்தில் தொலைத்தேன் என்னை
என்னை மட்டும் அல்ல என்னில் இருந்த பாரங்களையும் தான் !!
// இவற்றின் அபிநயத்தில் தொலைத்தேன் என்னை
ReplyDeleteஎன்னை மட்டும் அல்ல என்னில் இருந்த பாரங்களையும் தான் !!//
அருமை!
Thank you :-)
ReplyDelete