Monday, August 24, 2009

படித்ததில் பிடித்தது


ஓ... தோழனே! தோழியே!!
`
காலையில் மலருவது
மல்லிகை என்றால்...
`
அந்தி மாலையில் மலர்வது
முல்லை என்றால்...
`
உன்னைக் கண்டதும்
மலர்வது முகமா
இல்லை என் மனமா!
`
புது மலருக்குப் பூச்சூட்டி
புத்தம் புது புஷ்பத்திற்கு
புடவை கட்டி...
`
பனித்துளியை நீராட்டி
பூங்காற்றை அனுப்புவேன்
உனக்கு தூது சொல்ல...
`
சாதி, மதம், இனம், மொழி
இவற்றை எல்லாம் கடந்து வரும்
காற்றைப் போல நம் தூய நட்பையும்
சுவாசிப்போம்!!
`
காற்று வீச மறந்தாலும்;
இலைகள் அசைய மறந்தாலும்;
கடல் அலையை மறந்தாலும்;
பறவை பறக்க மறந்தாலும்;
மான் துள்ளி ஓட மறந்தாலும்;
குயில் கூவ மறந்தாலும்;
மயில்தோகை விரிக்க மறந்தாலும்;
நான் ஒரு நாளும் உனை மறவேன்!!!!!!!!!!!


No comments:

Post a Comment