வாழ்க்கை என்னும் சொர்க்க பூஞ்சோலையில்
உன்னுடன் ஒன்றாய் கை கோர்த்து நடக்க ஆசைதான் ..
பேருந்து பயணம் போல் முடியாமல் ,
இறுதி வரை உன்னுடன் வாழ்க்கை பயணத்தில் கூட வர ஆசைதான் ..
உனது துக்கங்களில் ,
உன் கண்ணீர் துளியை புன்னகை ஆக மாற்ற ஆசைதான் ...
உனது மகிழ்ச்சியில் ,
நானும் உன்னுடன் பகிர்ந்துகொள்ள ஆசைதான்...
உனது ஒவ்வொரு வெற்றியிலும் ,
உன்னுடன் இருந்து கூக்குரலிட ஆசைதான் ...
உனது தோல்விகளில் ,
தோள் கொடுத்து வெற்றிக்கு முதல் படியாக இருக்க ஆசைதான்
மழை நின்ற பின்பும் ,
மண்ணில் இருக்கும் ஈரம் போல ..
மெழுகு கரைந்த பின்பும் ,
கூட இருக்கும் திரியை போல ..
பூகம்பம் வந்த பின்பும் ,
நிலைக்கும் அதிர்வை போல ...
நிலவின் பிரிவிலும் ,
கூட இருக்கும் வானத்தை போல ..
மழையை தாங்கி பிடிக்கும் மேகத்தை போல ,
கண்ணும் அதனின் இமைகளும் போல ,
என்றும் உன்னுடன் இருக்க ஆசைதான் !
காதலியாக அல்ல .. ஒரு சிறந்த தோழியாக !!
என்றும் உன்னுடன் இருப்பது சாத்தியமில்லை
எனினும் நீ சாய தோள் தேடுகையில்
நட்பென்னும் நிழல் கொண்டு என்றும் உன்னருகில் நான் நின்றிருப்பேன் ..
என்றும் உனக்காக !!...
நான் உனக்கு உயிரா என்பது தெரியாது
ஆனால்
என் உயிர் உள்ள வரை
இன்று போல் என்றும் நம் பயணம் தொடரும் ...
This comment has been removed by the author.
ReplyDelete