அர்த்தமற்ற வாழ்வில் ,,
அத்யாயத்தை ஏற்படுத்த ,, அர்த்தமுள்ள அறிமுகமாய் ,
இருந்தது நம் சந்திப்பு ....
வாழ்விற்கு அர்த்தம் ஏற்பட்டதை
எண்ணி மகிழ்வதற்குள் ,,
அர்த்தமற்றதாய் நேர்ந்தது உனது பிரிவு !!
நீ இல்லை என்று தெரிந்தும் கூட
உன் தேடலில் திரிகிறேன் .....
நிலவில் உன் முகம் பார்க்க எண்ணி நிலவை தேடினேன் ,,,
அதிலும் ஏமாற்றமே ?!!
உன் நினைவுகளின் ஆதிக்கத்தில்
அன்று அமாவாசை என்பதை கூட மறந்தேனே !!!!
தினம் தினம் கனவிலாது ,
நீ வருவாய் என எண்ணினேன் ...
ஆனால் உயிரற்ற நீயோ
உயிரற்ற என் கனவுகளுக்கு
உன் வருகை மூலம் உயிர் கொடுக்க கூட மறுத்துவிட்டாய் !!
இறுதியில் கனவிலும் உன்னை சந்திக்காத ஏமாற்றம் ?!!!
நதியும் கரையும் போல ,
நாமும் இறுதிவரை பயணிக்க எண்ணினேன் ,
காலம் உன்னை ஓடும் நதி போல
அடித்துச் சென்றது .
அடித்துச் சென்றது .
நான் நிலைமாறாத கரையை போல
என்றும் உன் நினைவுகளிலே ,
என்றும் உன் நினைவுகளிலே ,
உன் தேடலிலே ,
சுழன்று கொண்டிருக்கிறேன்!
மரணத்திற்கு மீண்டும் ஜனனம் இல்லை
என்பது தெரிந்தும் கூட தேடுகிறேன் .
ஒருவேளை என் ஆறுதலுக்காக தான்
என்னுடனே சுழன்று கொண்டிருகிறதோ இந்த பூமி ??!
இன்று பூமியும் நானும் உனது தேடலில் ...!!
விடைகிடைக்காத புதிரைப் போல,
தேடலின் விடை தெரிந்தும் கூட ,
புதிராகவே எண்ணி உன்னை காண முயற்சிக்கிறேன் ..
அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ....!!
No comments:
Post a Comment