Tuesday, August 25, 2009

தனிமை




கார் மேகம் சூழ்ந்த அந்தி பொழுதில்
மேகத்திற்குள் மறைந்து கொண்டு
எட்டி பார்க்கும் மழை துளி...
என் இமைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்டுள்ள
கண்ணீர் துளியை போலவே ....
என் சுவாசத்தை கூட உணர முடியாத அளவில்
பயங்கரமான தென்றல் ...
முர்களுக்குள் நடுவே
இருக்கும் ரோஜாபூவின் தனிமையை போலவே ...
அமாவாசை பொழுதில்
நிலவை தனித்து இருக்கும் நட்சத்திரத்தை போலவே....
நானும் தனிமையின் தாக்கத்தில் பயணித்து கொண்டிருந்தேன்
ஒரு தனிமை நிறைந்த சாலையில் ....
உன்னுடன் நடக்கையில்
பூக்களின் மௌன மொழி கூட
கேட்ட காலம் அன்று !!
இன்றோ ....
பூக்களின் மொழி கூட கேளாதளவுக்கு
தனிமையின் தாக்கம் என்னுள் ....
எப்பொழுதும் என்னுடன் வாக்குவாதம் செய்யும்
என் மனசாட்சி கூட
என்னுடன் பேச மறுத்தது ஏனோ ?!!
எனக்கே எனக்குள்ளும் தனிமையின் தாக்கம்...
நொடிகள் நிமிடங்கள் ஆகி
நிமிடங்கள் நேரங்கள் ஆகியும் கூட
தொடர்ந்தது என் பயணம் ...
சற்றென்று எனக்குள் ஒரு புத்துணர்ச்சி ...
சுவாசத்தில் ஒரு எழுச்சி ...
ஒரு புதிய வேகம் என்னுள்
திரும்பி பார்த்தேன் இயல்பை உணர்வதற்காக
அப்பொழுது தான் புரிந்தது நான் சுவாசித்தது உன் சுவாசம் என்று ..
என்னை கிள்ளி பார்க்கும் அளவிற்கு இருந்தது உனது வருகை ..
கண்ணில் தேங்கி நின்ற கண்ணீர் வருவதற்குள்
நீ கூறிய வார்த்தை
என்னிடம்
"இறுதிவரை உன் கனவுகளிலும் ,
உன் நிஜங்களிலும்
உன் தனிமையிலும்
நான் இருக்கிறேன் நீ ??"
என்று கேட்ட அத்தருணம் ..
ஆம் என்று ஆமோதிக்கும் என் இமைகள் ..
நிகழ்வை மாற்றிய அந்த நொடி
என் தனிமையின் கடைசி நொடி அது தான்
நான் வாழ்ந்த முதல் நொடியும் அது தான் ...
தனிமையை துரத்திய வெற்றியில் இன்று நீயும் நானும் ஆக..

No comments:

Post a Comment