Saturday, August 29, 2009

நினைவுகளின் பயணத்தில் !!


மேகமாய் இருந்து என் கண்ணீரை
உன்னுள் அடைத்தாய்...

கவிதையாய் தோன்றி நான் சொல்ல
தவறிய வார்த்தைகளை
சொற்களாய் பொலிந்தாய்...

மழையாய் மாறி என்னை
உன் அன்பு மழையில் நனைத்தாய்...

வானவில்லாய் மாறி
உயிரிழந்த என் வாழ்விற்கு
வண்ணங்கள் சேர்த்தாய்...

கடலாய் மாறி
ஓய்ந்து போன என் உள்ளத்தில்
அலையாய் எழுந்து
என்னையும் எலவைத்தாய்...

சிறை செய்து வைத்த
என் எண்ணங்களை
பறவையாய் மாறி
பறக்க விட்டாய்...

தனிமையில் தவித்த தருணங்களில்
கனவாய் தோன்றி
என் தனிமையை போக்கினாய்...

கவலை சூழ்ந்த வேளையில்
மலராய் மாறி
வாழ்விற்கு வசந்தம் தந்தாய்...

நான் சொல்லாமலே
என்னை அறிந்திருந்த நீ ,,,,
எப்போதும் நீ என்னுடன் இருக்க வேண்டும் என்று நான்
சிந்திப்பதையும் அறிந்து
என்னுடன் இருப்பாய்
என்று எண்ணினேன்
என்னோ சில கஷ்டத்தில்
என்னை நீ பிரிந்து சென்றாய் !!!!!
அப்பொழுதும் கூட என்
துயரத்தை அறிந்திருந்த நீ ,
பிரிந்து சென்றாலும் கூட ,
உன் நினைவுகளை என்னிடம் விட்டுச் சென்றாய் !!!
உன் நினைவுகள் போதும்
பல யுகம் வாழ்வதற்கு !!!
என்றும் உன் நினைவுகளுடனே பயணிக்கிறேன் !!

Thursday, August 27, 2009

முதியோர் இல்லம்




பசுமைச் செழிப்போடு வாழ்ந்தோம் அன்று
இன்றோ உதிர்ந்து போன சருகுகளாய் வாழ்கின்றோம்
நீ தேடி வந்து வாழ்த்துக்கள் பெற்ற காலங்கள் அவை
கண் எதிரே தோன்றி விடாதே என்று
நீ வாழ்த்தும் காலங்கள் இவை .
ஒரு மனிகூருக்கு பல முறை
நீ என்னை அழைத்த நொடிகள் நெஞ்சில்
நிற்கிறது
ஆனால் இன்றோ .......
மர கிளைகள் கூட என்னை
கை விரித்து அழைக்கிறது
மேகம் கூட எனக்காய் கண்ணீர் சிந்துகிறது
நிலவு கூட முகம் காட்டி புன்னகைக்கிறது
எனினும் ஒரு சலனம் கூட உன்னில் இல்லையே ,,
ஒரு முறை கூட என்னை
அழைக்கவில்லையே
உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வதில்
முன்னுரையாய் இருந்தேன் ,,,,,
நான் சற்றும் எதிர் பார்க்க வில்லை ,,,,
நான் சொர்க்கத்திற்கு முன்னுரை ஆகும் முன் ,,,,,,
உன் வாழ்வில் முடிவுரை ஆவேன் என்று
உன் அருகாமையில் இறுதி வரை
வாழ கனா கண்டேன் ,,
நீயோ என்னை முதியோர் இல்லத்தில்
கொண்டு சேர்க்க கனா கண்டு
இருந்துருகிறாய்
இப்போது நான் ஏங்குவது உன் அருகாமைக்காக அல்ல
உன் பணத்திற்காக அல்ல
உன் அடைக்கலதிற்காக அல்ல
உன் கண்ணீருக்காக அல்ல
அந்த ஒரே ஒரு சொல் அம்மா
என்று நீ என்னை ஒரு முறையாவது
அழைப்பதர்க்காக ஏங்குகிறேன் ...
ஒரு முறை அம்மா உன்னை
நேசிக்கிறேன் என்று கூறிவிடு
அந்த ஒரு சொல்லில் நான் உயிர் துறப்பேன்

அன்பு



வார்த்தை பரிமாற்றங்கள் மூலம்
விவரிக்க எண்ணி தோற்று போனேன் !!
என் ஒவ்வொரு துளி கண்ணீரிடமும்
கேட்டுப்பார் என் அன்பை அழகாய் பறைசாற்றும் !!!

நட்பு



என் கனவுகள் நீயாக இருக்கும் வரை ,
என் நினைவுகளில் நீ உறைந்திருக்கும் வரை ,
என் சுவாசத்தில் நீ கலந்திருக்கும் வரை ,
நான் மண்ணோடு சேரும் வரை ,
வானுலகமும் பூவுலகமும் சந்திக்கும் வரை ,
என்றென்றும் என் நெஞ்சில் நீ நிலைத்திருப்பாய் ...
என்றும் மாறாத நம் தோழமையுடன் !!

பிரிவு




நீ என் வாழ்வில் வானவில்லாய் வந்தாய்,

வண்ணங்கள் சேர்த்திட வந்தாய்
என எண்ணி மகிழ்ந்தேன் !!
நினைத்து முடிப்பதற்குள் மறைந்து விட்டாயே !!

வெற்றி தோல்வி!!



தோல்வி என்பது தேய்பிறை ...

வெற்றி என்பது வளர்பிறை ...
இவ்விரண்டும் மாறி மாறி வருவது தான்
வானுக்கும் அழகு !!
வாழ்விற்கும் இயல்பு !!

Tuesday, August 25, 2009

நம்பிக்கை!!

அர்த்தமற்ற வாழ்வில் ,,
அத்யாயத்தை ஏற்படுத்த ,,
அர்த்தமுள்ள அறிமுகமாய் ,
இருந்தது நம் சந்திப்பு ....
வாழ்விற்கு அர்த்தம் ஏற்பட்டதை
எண்ணி மகிழ்வதற்குள் ,,
அர்த்தமற்றதாய் நேர்ந்தது உனது பிரிவு !!
நீ இல்லை என்று தெரிந்தும் கூட
உன் தேடலில் திரிகிறேன் .....
நிலவில் உன் முகம் பார்க்க எண்ணி நிலவை தேடினேன் ,,,
அதிலும் ஏமாற்றமே ?!!
உன் நினைவுகளின் ஆதிக்கத்தில்
அன்று அமாவாசை என்பதை கூட மறந்தேனே !!!!
தினம் தினம் கனவிலாது ,
நீ வருவாய் என எண்ணினேன் ...
ஆனால் உயிரற்ற நீயோ
உயிரற்ற என் கனவுகளுக்கு
உன் வருகை மூலம் உயிர் கொடுக்க கூட மறுத்துவிட்டாய் !!
இறுதியில் கனவிலும் உன்னை சந்திக்காத ஏமாற்றம் ?!!!
நதியும் கரையும் போல ,
நாமும் இறுதிவரை பயணிக்க எண்ணினேன் ,
காலம் உன்னை ஓடும் நதி போல
அடித்துச் சென்றது .
நான் நிலைமாறாத கரையை போல
என்றும் உன் நினைவுகளிலே ,
உன் தேடலிலே ,
சுழன்று கொண்டிருக்கிறேன்!
மரணத்திற்கு மீண்டும் ஜனனம் இல்லை
என்பது தெரிந்தும் கூட தேடுகிறேன் .
ஒருவேளை என் ஆறுதலுக்காக தான்
என்னுடனே சுழன்று கொண்டிருகிறதோ இந்த பூமி ??!
இன்று பூமியும் நானும் உனது தேடலில் ...!!
விடைகிடைக்காத புதிரைப் போல,
தேடலின் விடை தெரிந்தும் கூட ,
புதிராகவே எண்ணி உன்னை காண முயற்சிக்கிறேன் ..
அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ....!!

என்றும் தோழியாக!




வாழ்க்கை என்னும் சொர்க்க பூஞ்சோலையில்
உன்னுடன் ஒன்றாய் கை கோர்த்து நடக்க ஆசைதான் ..
பேருந்து பயணம் போல் முடியாமல் ,
இறுதி வரை உன்னுடன் வாழ்க்கை பயணத்தில் கூட வர ஆசைதான் ..
உனது துக்கங்களில் ,
உன் கண்ணீர் துளியை புன்னகை ஆக மாற்ற ஆசைதான் ...
உனது மகிழ்ச்சியில் ,
நானும் உன்னுடன் பகிர்ந்துகொள்ள ஆசைதான்...
உனது ஒவ்வொரு வெற்றியிலும் ,
உன்னுடன் இருந்து கூக்குரலிட ஆசைதான் ...
உனது தோல்விகளில் ,
தோள் கொடுத்து வெற்றிக்கு முதல் படியாக இருக்க ஆசைதான்
மழை நின்ற பின்பும் ,
மண்ணில் இருக்கும் ஈரம் போல ..
மெழுகு கரைந்த பின்பும் ,
கூட இருக்கும் திரியை போல ..
பூகம்பம் வந்த பின்பும் ,
நிலைக்கும் அதிர்வை போல ...
நிலவின் பிரிவிலும் ,
கூட இருக்கும் வானத்தை போல ..
மழையை தாங்கி பிடிக்கும் மேகத்தை போல ,
கண்ணும் அதனின் இமைகளும் போல ,
என்றும் உன்னுடன் இருக்க ஆசைதான் !
காதலியாக அல்ல .. ஒரு சிறந்த தோழியாக !!
என்றும் உன்னுடன் இருப்பது சாத்தியமில்லை
எனினும் நீ சாய தோள் தேடுகையில்
நட்பென்னும் நிழல் கொண்டு என்றும் உன்னருகில் நான் நின்றிருப்பேன் ..
என்றும் உனக்காக !!...
நான் உனக்கு உயிரா என்பது தெரியாது
ஆனால்
என் உயிர் உள்ள வரை
இன்று போல் என்றும் நம் பயணம் தொடரும் ...

தனிமை




கார் மேகம் சூழ்ந்த அந்தி பொழுதில்
மேகத்திற்குள் மறைந்து கொண்டு
எட்டி பார்க்கும் மழை துளி...
என் இமைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்டுள்ள
கண்ணீர் துளியை போலவே ....
என் சுவாசத்தை கூட உணர முடியாத அளவில்
பயங்கரமான தென்றல் ...
முர்களுக்குள் நடுவே
இருக்கும் ரோஜாபூவின் தனிமையை போலவே ...
அமாவாசை பொழுதில்
நிலவை தனித்து இருக்கும் நட்சத்திரத்தை போலவே....
நானும் தனிமையின் தாக்கத்தில் பயணித்து கொண்டிருந்தேன்
ஒரு தனிமை நிறைந்த சாலையில் ....
உன்னுடன் நடக்கையில்
பூக்களின் மௌன மொழி கூட
கேட்ட காலம் அன்று !!
இன்றோ ....
பூக்களின் மொழி கூட கேளாதளவுக்கு
தனிமையின் தாக்கம் என்னுள் ....
எப்பொழுதும் என்னுடன் வாக்குவாதம் செய்யும்
என் மனசாட்சி கூட
என்னுடன் பேச மறுத்தது ஏனோ ?!!
எனக்கே எனக்குள்ளும் தனிமையின் தாக்கம்...
நொடிகள் நிமிடங்கள் ஆகி
நிமிடங்கள் நேரங்கள் ஆகியும் கூட
தொடர்ந்தது என் பயணம் ...
சற்றென்று எனக்குள் ஒரு புத்துணர்ச்சி ...
சுவாசத்தில் ஒரு எழுச்சி ...
ஒரு புதிய வேகம் என்னுள்
திரும்பி பார்த்தேன் இயல்பை உணர்வதற்காக
அப்பொழுது தான் புரிந்தது நான் சுவாசித்தது உன் சுவாசம் என்று ..
என்னை கிள்ளி பார்க்கும் அளவிற்கு இருந்தது உனது வருகை ..
கண்ணில் தேங்கி நின்ற கண்ணீர் வருவதற்குள்
நீ கூறிய வார்த்தை
என்னிடம்
"இறுதிவரை உன் கனவுகளிலும் ,
உன் நிஜங்களிலும்
உன் தனிமையிலும்
நான் இருக்கிறேன் நீ ??"
என்று கேட்ட அத்தருணம் ..
ஆம் என்று ஆமோதிக்கும் என் இமைகள் ..
நிகழ்வை மாற்றிய அந்த நொடி
என் தனிமையின் கடைசி நொடி அது தான்
நான் வாழ்ந்த முதல் நொடியும் அது தான் ...
தனிமையை துரத்திய வெற்றியில் இன்று நீயும் நானும் ஆக..

Monday, August 24, 2009

தேடல்

அர்த்தமுள்ள அறிமுகமாய் ,

இருந்தது நம் சந்திப்பு ....

வாழ்விற்கு அர்த்தம் ஏற்பட்டதை

எண்ணி மகிழ்வதற்குள் ,,

அர்த்தமற்றதாய் நேர்ந்தது உனது பிரிவு !!

நீ இல்லை என்று தெரிந்தும் கூட

உன் தேடலில் திரிகிறேன் .....

நிலவில் உன் முகம் பார்க்க எண்ணி நிலவை தேடினேன் ,,,

அதிலும் ஏமாற்றமே ?!!

உன் நினைவுகளின் ஆதிக்கத்தில்

அன்று அமாவாசை என்பதை கூட மறந்தேனே !!!!

தினம் தினம் கனவிலாது ,

நீ வருவாய் என எண்ணினேன் ...

ஆனால் உயிரற்ற நீயோ

உயிரற்ற என் கனவுகளுக்கு

உன் வருகை மூலம் உயிர் கொடுக்க கூட மறுத்துவிட்டாய் !!

இறுதியில் கனவிலும் உன்னை சந்திக்காத ஏமாற்றம் ?!!!

நதியும் கரையும் போல ,

நாமும் இறுதிவரை பயணிக்க எண்ணினேன் ,

காலம் உன்னை ஓடும் நதி போல அடித்துச் சென்றது ...

நான் நிலைமாறாத கரையை போல என்றும் உன் நினைவுகளிலே ,

உன் தேடலிலே ,

சுழன்று கொண்டிருக்கிறேன்!!

மரணத்திற்கு மீண்டும் ஜனனம் இல்லை

என்பது தெரிந்தும் கூட தேடுகிறேன் ...

ஒருவேளை என் ஆறுதலுக்காக தான்

என்னுடனே சுழன்று கொண்டிருகிறதோ இந்த பூமி ??!!!!!

இன்று பூமியும் நானும் உனது தேடலில் ...!!

விடைகிடைக்காத புதிரைப் போல,

தேடலின் விடை தெரிந்தும் கூட ,

புதிராகவே எண்ணி உன்னை காண முயற்சிக்கிறேன் ..

அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ....!!

படித்ததில் பிடித்தது


ஓ... தோழனே! தோழியே!!
`
காலையில் மலருவது
மல்லிகை என்றால்...
`
அந்தி மாலையில் மலர்வது
முல்லை என்றால்...
`
உன்னைக் கண்டதும்
மலர்வது முகமா
இல்லை என் மனமா!
`
புது மலருக்குப் பூச்சூட்டி
புத்தம் புது புஷ்பத்திற்கு
புடவை கட்டி...
`
பனித்துளியை நீராட்டி
பூங்காற்றை அனுப்புவேன்
உனக்கு தூது சொல்ல...
`
சாதி, மதம், இனம், மொழி
இவற்றை எல்லாம் கடந்து வரும்
காற்றைப் போல நம் தூய நட்பையும்
சுவாசிப்போம்!!
`
காற்று வீச மறந்தாலும்;
இலைகள் அசைய மறந்தாலும்;
கடல் அலையை மறந்தாலும்;
பறவை பறக்க மறந்தாலும்;
மான் துள்ளி ஓட மறந்தாலும்;
குயில் கூவ மறந்தாலும்;
மயில்தோகை விரிக்க மறந்தாலும்;
நான் ஒரு நாளும் உனை மறவேன்!!!!!!!!!!!


வறுமை

பூக்கள் மலர்ந்திட இதழ்கள் தேவை

வர்ணனை செய்திட கவிதைகள் தேவை

கலைகளை ரசித்திட கண்கள் தேவை

உலகம் சிறக்க உண்மைகள் தேவை

பல நாள் வாழ ஜனனம் தேவை

உயிர் வாழ தேவைகள் தேவை

இத்தனை தேவைகளின் மத்தியில் வறுமை தேவையா ??

அழகிய வாழ்க்கை என்னும் தருணத்தில் ,,,

வறுமை என்னும் மரணத்தில் ,

வாழும் மனிதர்களுக்காக அர்பணிக்க பட்டவை

பெருக செழிமை

ஒழியட்டும் வறுமை என்னும் கொடுமை