கேட்காமலே நனைத்துவிட்ட
மழைத்துளியை போல் ,
உதிர்ந்த பின்பும் மரமிடையே
மீண்டும் புதிதாய் பூக்கும் பூக்களை போல் ,
சங்கில் சத்தமின்றி நுழையும்
காற்றை போல் ,
புல்லிதழில் புறப்பட்ட பனித்துளியின்
யாத்திரையை போல் ,
சரிந்த பின்பும் சுவாசம் உட்புக
ஆடும் மரங்களை போல் ,
இதழ்கள் அசைக்காமலே
மனதில் கேட்கும் இசையை போல் ,
ஓசைகள் ஏதுமின்றி ,
அழைப்புகள் ஏதுமின்றி ,
ஆசைகள் ஏதுமின்றி ,
கனவுகள் ஏதுமின்றி ,
எதிர்பாராத புயலாய் வந்தாய் ..
ஒழிந்திருந்த கனவுகள் எல்லாம்
கைகூடி மத்தாளம் போட்டு நிஜங்களாகும் வண்ணம் ,
நிராசைகளெல்லாம் நிறைவேறும் வண்ணம் ,
செவிடானாலும் உன் ஓசைகள் கேட்கும் வண்ணம் ,
கண்ணீரிலும் என் இதழ்கள் சிரிக்கும் வண்ணம் ,
வந்தாய் என் வாழ்வில் நட்பாய்!
வாழ்வை மாற்றினாய் தித்திப்பாய் !
இப்படியே உரைந்திட ஏங்கிடும் ,கனவாய்!
நம் அன்பென்னும் யாத்திரை
என்றும் தொடரும் மகிழ்ச்சியாய்!