Tuesday, October 22, 2013

நீ என் அருகில் இல்லாமல் தவிக்கிறேன்!


பூத்துக்  குழுங்கும் பூக்களின் சிரிப்பில்,
மழைத்துளியின் இதமான நனைப்பில்,
அனுதினமும் உன் குரலை பிரதிபளிக்கும் சுவரில்,
நித்தமும் நீ உறங்கிய தலையனையின்  ஸ்பரிசத்தில்,
இயல்பு மாறாத புகைப்படத்தில்,
உன்னை காண்கிறேன் அனுதினமும்!
விட்டுச் சென்ற உணர்வுகள்,
வெளிபடுத்த தவறிய அன்பு வார்த்தைகள்,
யாரும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றாய்!
பலமுறை சொப்பனத்தில் உன்னைக் காண்கிறேன்!
ஒவ்வொரு முறையும் கனவுகள் நிஜங்களாகாத
என்ற ஏக்கத்துடனே விழிக்கிறேன்!
சேகரித்த சிட்டு நினைவுகளுடன் இன்றோ நான் பயணிக்கிறேன்
உன் பாதச்சுவடுகளை பின் தொடர்ந்துகொண்டே!
பாட்டிமா, நீ என் அருகில் இல்லாமல் தவிக்கிறேன்..

1 comment: