கண் விழித்ததும் அருகில் தேநீர் இல்லையென்றால்,
அம்மாவிடம் டிஷ்யூம் டிஷ்யூம்!
தி இந்து நாளிதழுக்கும், தின மலர் நாளிதழுக்கும்,
அதிகாலையில் தந்தையிடம் போட்டியிடுவதும் வழக்கமே!
டெய்ரி மில்க் தொடங்கி ரிமோட் வரை
இப்படி பல அற்ப காரணங்களுக்காக போரிடுவதும் வழக்கமே!
இப்படி அன்றாட வாழ்வில்,
நிறைகளை திரையிட்டு, குறைகளையே காணும்
மனித எண்ணங்களின் தாக்கம் நம்முள்ளே!
வறண்டு போன சர்மம்,
அழுக்கேறிய குளல்,
கிழிஞ்சல்கள் கொண்ட ஆடை,
காய்ந்து போன வயிறு,
குடும்பத்தினால் கைவிடப்பட்ட நிலை,
சிறு குழந்தைகளை பார்க்கும் தருணங்களில்,
தன் குழந்தையை பார்க்க துடிக்கும் நெஞ்சம்!
நிறைகள் பல, குறைகள் சில என
வாழும் இவர்கள் மத்தியில்,
நாமெல்லாம் உயிர் பெற்றும் உணர்வுகளற்ற
காற்று நிரம்பிய பலூன்கள் மட்டுமே!
-தினம் தினம் வறுமையில் வாழ்பவர்களுக்கு சமர்பனமாய்!
Good post
ReplyDelete