Saturday, October 24, 2009

காதலர்களின் பொய்கள் !




பிரிவின் தாக்கத்தின் போதும் ,
கண்கள் கலங்கும் போதும் ,
கண்ணில் தூசி விழுந்து விட்டது என்ற பொய் !
நினைவுகளின் தாக்கத்தால்
கனவுகளின் தொல்லையால்
விழித்திருந்துவிட்டு
தூக்கமில்லை என்ற பொய் !
சண்டை சச்சரவுகளில் இருந்துவிட்டு ,
ஏன் சோகமாய் இருகிறாய் என்று கேட்கும் தோழியிடம் ,
மனசு சரி இல்லை என்ற பொய் !
எத்தனை பொய்கள் தான் கூறுவாய்
என்று கேட்கும் மனதிடம்
என் காதலை மறக்கும் வரை
என்று மனதிடமும் பொய் !
காதல் மெய்யாகும் போது
பொய்களும் மெய்யாகுமே !

Monday, October 19, 2009

நட்பு !காதல் !




முன்னுரை இன்றி தோன்றும் காதலுக்கும் ,
முன்னுரையோடு தோன்றும் நட்புக்கும் ,
வேறுபாடு ஒன்று மட்டுமே !
காதல் முடிவுரை ஆனால் நட்பின் முகவரி தோன்றும் .
நட்பு முடிவுரை ஆனால் ஆயுளின்
முகவரியே தொலைந்து விடும்!!

Sunday, October 11, 2009

விமான பயணம்!



முதல் முறையாய் பூமியை கண்டேன்
பல வண்ணங்களில்
நான் உன்னுள் இருந்த போது!
என் செவிகளும் செயல் இழப்பதை உணர்ந்தேன்
பூமியை விட்டு பிரிந்து சென்ற போது!
விண்ணில் பறப்பது போன்ற உணர்ச்சி
உன்னுள் இருந்த அந்த சில நொடிகள் !
வாழ்வை இன்னும் அழகாய் மாற்றிய தருணம் அவை !
என்றும் மாறாத முத்திரையாய் பதிந்தது
என் முதல் விமான பயணம் !

இயற்கையின் அழகு !




யாரும் இல்லாத அமைதியான சாலை ,
மௌனத்தை கலைக்கும் வண்ணம்
சாலையில் ஊடுருவிய வாகன சப்தம் !
ஜன்னலை மூட மனம் இல்லை
தென்றலின் ஸ்பரிசத்தில் லயித்து போனதால் !
பௌர்ணமி ஆன அன்று ,
ஹய்யோ இதுவரை நான் பார்த்திடாத அழகை கண்டேன் நிலவில் !
ஒளியற்ற புல்வெளியை சூரியன்
மெருகூட்டுவது போல
அந்த மௌனமான சாலையை
மெருகூட்டியது வாகனத்தின் ஒளி!
சற்றும் எதிர் பார்க்காத வண்ணம்
மேகம் என்னை காண துடித்ததினால்
மழையை தூதாக அனுப்பியது !!
ஆகா மழை தான் எத்தனை அழகு ?!
சாலை ஓர மரங்களின் ஓயா நடனத்தின் அழகு தான் எத்தனை?!
இவற்றின் அபிநயத்தில் தொலைத்தேன் என்னை
என்னை மட்டும் அல்ல என்னில் இருந்த பாரங்களையும் தான் !!