Tuesday, December 7, 2010


அலைகள் மீது தவழும் குமிழியாய் ,
புல் மீது யாத்திரை செய்யும் பனித்துளியாய்,
சுடும் சுற்றொடரில் வீசும் தென்றலாய் ,
உயிரிழந்த பகலுக்கு மெருகூட்டும் இசையாய் ,
அமைந்தது அந்த ஓர் இரவு !

என்னிலை புகுந்த தனிமையின் தருணத்தில்,
என்னை தன்னிலை இழக்க செய்தாய் உனது வருகையால்!
சலனமற்ற என்னில்,
எதிர்பாராத உனது ஸ்பரிசம்
ஆஹா! சஹாராவில் குளுமை போல..

உனது வருகை ,
எழுச்சிகளற்ற என் அனுதின வாழ்வில்
புத்துணர்ச்சியாய் !

மணிப்பொழுதில் நீ ஏற்படுத்திய வாசம் ,
என் பொக்கிஷ சுவாசமாய் !
தனிமையின் முடிவுரையாய் வந்தாய்,
என்னை கவலைகளை மறக்க செய்து ,
நீ இருந்த நொடிபொழுதில் மகிழ்ச்சியாக்கினாய்!

ஜடமாய் பயணித்த என் பயணத்தில் ,
வந்தாய் திடீர் விருந்தாளறாய்!
நீ ஏற்படுத்தி சென்ற மெல்லிசை உணர்வுகளை
நேசிக்கிறேன் உன் ஒவ்வொரு வருகையிலும்
என் செல்ல மழையே!!

Saturday, December 4, 2010

????


முட்கள் நிறைந்த பாதையில் ,
மலரின் பாதச்சுவடை தேடியபடியே தொடர்கிறது நம் பயணம்!
கணக்கில்லா அனுபவங்களுக்கிடையே ,
நாம் நம் வழிகளின் தேடலிலே !
பிரபஞ்சத்தின் எல்லை வரை ,
சிரகடித்துச்செல்ல கனவுகளும் உண்டு ..
சிறகுகளை நிகழ்வுகளின் சிறைகள்
தடுத்த மாயமும் உண்டு !
அன்றாட வாழ்வில்
எதிர்பாராத இழப்புகள்,
வரவேற்காத தோல்விகள் ,
புன்னகையை திருடிய கவலைகள் ,
மனக் கோவிலில் குடியேறிய குழப்பங்கள் ,
வாழ்வை எதிர் கொள்ள முடியாத தவிப்புகள் ,
ஓடிய காலத்தை எண்ணி கண்ணீர் பின்னோட்டங்கள் என
எத்தனை விதமான திருப்பங்கள் தான் இந்த வாழ்வில் ?!
அவ்வபோது சோர்ந்து போகும் உள்ளங்களே ,
நினைவிற் கொள்வோம்
பேய் மழைக்கும் இறுதி மழைத்துளி உண்டு !
அதிரும் பூகம்பத்திற்கும் நித்திரை உண்டு !
உயிரிழந்த கடிகார முள்ளிலும் மறுதுடிப்பு உண்டு !
இறப்புகள் அதிகரிப்பதால் ஜனனம் குறைந்துவிடவில்லை!
மலர்கள் உதிர்வதால் செடிகள் மறித்து போவதில்லை!
வலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் ,
மீன்களின் எண்ணிக்கை குறைவதில்லை!
நம் வாழ்வும் அப்படிதான் நம்பிக்கை இருக்கும் வரை,
நாம் நிலைகுலைவதில்லை!
நாம் சிறைகளை தடுத்து ,
வலைகளை தாண்டி,
கவலைகளை எரித்து,
புதிதாய் பிறக்கும் குழந்தையாய் அவதரிப்போம் !
திரையில் ஒளிந்திருக்கும் அழகிய வாழ்வை எதிர்கொள்ள :)