Saturday, October 13, 2012
Friday, October 5, 2012
உறவுகளில் சுயநலமாய் ஏதோ ஒரு தருணத்தில் ஆது மனிதர்கள் மாறிவிடுகிறார்கள்.. அதனை அடிப்படையாக வைத்து தோன்றிய கவிதை இது..
இமைகளை துறக்க மறுக்கிறேன்,
கனவில் வரும் நீ கலைந்து விடுவாய்
என்ற பயத்தில்..!
சுவாசிக்க கூட பலமுறை யோசிக்கிறேன்,
எண்ணுள் சேகரித்த உன் மூச்சு காற்றை
தொலைத்து விடுவேன் என்ற பயத்தில்..!
கடுமையாய் வெறுத்த சூரியனை கூட
நேசிக்கிறேன் இன்று,
பிம்பமாய் உன் நிழலை,
என்னுடன் கொண்டு வருவதற்காய்..!
நித்தமும் உறங்குவதற்கு கூட மறுக்கிறேன்,
நிரந்திரமாய் உறங்கி விட்டால் நீ தனிமையாய்
இருப்பாய் என்பதற்காய்..!
எண்ணுள் நினைவு தளும்பும் வரை,
என் நினைவுகள் அனைத்தும்,
நீயாக இருக்க மட்டுமே ஆசை..!
Subscribe to:
Posts (Atom)