சிறு குழந்தைக்கு
நடப்பது என்ன என்று புரியாத
புதிர் கனவு..!
மீண்டும் பெற முடியாத நினைவுகளை
சுமக்கும் மனிதனுக்கு,
ஏமாற்றம் கனவு..!
நெஞ்சம் நெகிழ்ந்து காதலிக்கும் மனிதனுக்கு,
ஸ்வாரஸ்யம் கனவு..!
எடுத்ததையெல்லாம் உருவகபடுத்த
முயற்சிக்கும் பார்வையற்றவனுக்கு,
எண்ணக்கோட்டை கனவு..!
வறுமை தன் வீட்டு கதவு தட்டாத
பணக்காரனுக்கு,
நாடகமேடை கனவு..!
ஒரு ஜான் வயிற்றுக்காய்
போராடும் ஏழைக்கு ,
ஏக்கம் கனவு..!
தன் குழந்தையின் வருகைக்காய்
காத்திருக்கும் கர்ப்பிணி தாய்க்கு,
எழுச்சி அலை கனவு..!
வாழ்க்கை பந்தயத்தில்
ஓடத் தயாராய் இருக்கும் இளைஞனுக்கு,
ஊக்கம் கனவு..!
எண்ணங்களாய்,
நினைவுகளாய்,
நிகழ்வுகளாய்,
ஸ்பரிசமாய் வரும் கனவுக்காய் நானோ ஏங்கி நிற்கிறேன்!
என் நிகழ கால கசப்பில் இருந்து,
ஒரு பொழுதாது சுதந்திரம் பெற்று ,
சிறகுகளாய் முழைத்து பறவையாய் பறப்பதற்காய்..!