துயில் கொண்ட என் விழிகளில்
இமைகள் அசையும் அந்த நொடியில்,
அனுதினமும் கண்முன்னே தோன்றுகிறது
உனது பிம்பமே!
உன் காதலில் நனைந்ததாலோ என்னவோ,
தினம் தினம் என்னை பூரிப்புடன் பார்த்த கண்ணாடியோ
இன்று சோகமாய் பார்க்கிறதே!
கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டு பயணித்த
பேருந்து பயணம் கூட அன்று சுவாரசியமாய் இருந்தது,
இன்றோ இருக்கையில் பயணிக்கும் சூழல் இருந்தும் கூட
அதிலே ஓர் வெறுமை!
நின்று ரசித்த பறவை சப்தங்களில் கூட
இன்று ஓர் மௌனம்!
நம் பாதம் பதித்த சாலையாவும்
பூக்கள்மீது நடந்தும் கூட,என் கால்களில்
முட்கள் ஊடுருவியவாறு ஓர் வலி!
நான் கேட்பது
நித்தம் உன் அருகில் இருக்கவோ,
முப்பொழுதும் உனது சுவாசத்தில் இருக்கவோ,
போகும் இடமெல்லாம் உன் கரங்களில் இருக்கவோ,
நீ நொடிக்கு பலமுறை பரிமாறும் பார்வையோ,
நீ முனுமுனுக்கும் சிணுங்கலோ இல்லை...
உன் கல்லறையில் தவிக்கும் என் நினைவுகளை விடுத்து,
மீண்டும் ஒருமுறை நிகழ்வாய் என் முன்னே நீ வரவேண்டும் என்பதே!
உனது சுவாசத்தை தேடுகிறேன்,
நிற்கப் போகும் என் இதயத்துடிபிற்கு
உயிர் கொடுப்பதற்காய்!!