பிரிவை எண்ணி வருந்திய வேளையில் தோன்றிய கவிதை தான் இது .. வசந்த காலமான இந்த அழகிய வாழ்வுக்கு பின்னால் தோன்றும் உணர்வுகள் தான் இவை :(
எங்கோ வளர்ந்தோம் ,
கல்லூரி என்னும் பாலத்தில் நண்பர்களாய் இணைந்தோம்..
மகிழ்வை பகிர்ந்து கொண்டோம் ,
இன்று பிரிவையும் பகிர்கிறோம் :(..
வசந்தம் மட்டுமே வந்த பாதையில் ,
பிரிவு என்னும் புயலும் வீசுகிறது ..
கசக்கும் நினைவுகளை இதயத்தில் பதிக்கிறதே!
ஒன்றாய் சென்றோம் ,
இமைக்க நேரம் இன்றி சிரித்தோம் ,
கை கோர்த்து பயணித்தோம் ,
வண்ணத்து பூச்சிகளாய் பறந்தோம் ,
உணவுகளை பகிர்ந்தோம் ,
உணர்வுகளையும் பகிர்ந்தோம் ,
இணை பிரியாத உறவுகள் ஆனோம் ..
அழகிய தருணங்களை ஏற்படுத்திய கடவுள்,
ஏனோ பிரிவையும் வாழ்வின் அங்கமாய் வடிவமைத்துவிட்டார்.
கல்லூரி வாழ்வின் கடைசி நாளான அன்று ,
இலையுதிர் காலமென
இயம்பக் கேட்டதுண்டு
மரங்களே உதிர்ந்திடும்
மாயமும் கண்டோம் அன்று ...
இனி எக்கணம் சந்திப்போமோ
எவ்வண்ணம் சந்திப்போமோ ?
நினைவுத்தென்றல் வீசுகையிலெல்லாம் ,
வருடும் ஒவ்வொரு காற்றின் ஸ்பரிசத்திலும்
நினைவுகூர்ந்து கொண்டே தான் இருப்போம்
பழைய காற்றின் நினைவுகளை !
பிரிவை ஏற்க மனமில்லை
எனினும் வாழ்வை ஏற்பதை விட வேறு வலி இல்லை..
நினைவுகளின் பயணத்தில் என்றுமே மங்காத புன்னகையுடன் !