Sunday, March 14, 2010

விடியலின் தேடலில்


அனுதின வாழ்வின் அங்கமாகிவிட்ட துயரம் ,
புன்னகையை மறந்த இதழ்கள் ,
கண்ணீர் துளியை சேகரித்த விழிகள் ,
இரண்டும் நடத்தும் நாடக விழாவில்
உணர்ச்சிகளற்ற உயிராகவே ஆனேன் ஓர் நாள் !
கதறி அழுக தோன்றும்
எனினும் விட்டில் பூச்சியாக புன்னகைக்கிறேன்
புன்னகையில் ஒளிந்திருக்கும் கண்ணீரை யார் அறிவாரோ ?
வாழ்வின் இலையுதிர் காலம் இவை தானோ ?!
மறுபடியும் தழைப்பது எப்போதோ ?
நொடிகளின் அசைவில் அடிகள் அதிகரித்தன ,
எனினும் அதனில் வீழ்ந்து விடவில்லை ,
நிரந்தரமான விடியலின் தேடலில்
என்றுமே நான் நானாகவே !!

Saturday, February 6, 2010

என்றும் அழியாத காதல் !


என் கண்கள் ஏங்கியும்
விழிக்கமுடியவில்லை,
நெடுநீள பயணம் முடிவடைந்ததேனோ ?!
உறக்கத்திலே தொலைந்ததும் ஏனோ ?!
கனவுகள் உறைந்ததை உணர்ந்தேன் ,
உணர்ச்சிகள் செயல் இழந்ததை உணர்ந்தேன் ,
எனினும் நினைவுகளின் உயிரோட்டம் என்னுள்ளே!!
அய்யோ..
நான் நித்தமும் மூழ்கிய உன் மூச்சில்
இனி மூழ்க முடியாமல் போனதேனோ ?!
உன் கரங்களின் செல்ல சிறையில் ,
இனி பயணிக்க முடியாததேனோ ?!
உன் மார்பில் உறங்கிய தூக்கத்தை தொலைத்து ,
நிரந்தரமாய் தூங்கிய அவலம் ஏனோ ?!
என் இயலாமையையும் மீறி ,
என் காதலை சொல்ல தவித்தேன் ,
சொல்ல மறந்த காதல் ஆனதேனோ ?!
கண்ணில் நிறைந்த ஏக்கம் ..
நெஞ்சில் நிறைந்த உனது தாக்கம்..
இறுதி துடிப்பில் நிறைந்த உனது சுவாசம் ,
என் இறுதி பொக்கிஷமாய் !!
இறந்தேன் நிரந்திரமாய் ,
வாழ்வேன் உன்னில் நிரந்திரமாய் ,
மறித்தும் காதலிக்கிறேன் உன்னை ,
இன்னும் வாழ்கிறாயே என்னுள் !!

Saturday, January 9, 2010

நினைவுகள்


நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது,
முடிவில்லாமல் ...

நாம் பேசி சிரித்த
நொடிகளுக்கு சாட்சியாய்
நின்ற மரங்கள் !
அதனிடமும் மௌனம் ?!!

நாம் அமர்ந்த சாலையோர இருக்கைகள் ,
நான் தனியே வருவேன்
என அறிந்ததோ என்னவோ?!
அதிலும் ஒரு சேதம் !
நீ இன்றி தனித்து வந்த வருகையை
சற்றும் எதிர்பார்க்காத இருக்கை!!

நாம் சென்ற பாதையில்
நம் சுவாசம் நிறைந்த காற்றில்
இன்று ஒரு வெறுமையை கண்டேன் !
காற்றும் கூட உன் தேடலில்தான்
சுற்றித்திரிகிறது ஓயாமல் !!

நாம் சென்ற போது
இசையை ஒலித்த
பறவைகளின் சப்தம் ,
இன்று அவைகள் கூட
என் செவியில் சோகமாய் !
யாருக்கு தெரியும்?
அந்த பறவைகளின் பேச்சு கூட
நம்மை பற்றியதாக இருக்கலாம் ?!

உன் பார்வை காட்டிய பரிவு,
உன் அன்பில் நனைந்த கோவம்,
உன் புன்னகையில் நிறைந்த உன் மொழிகள் ,
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்,
அனைத்தையும் எண்ணி கரைந்த நொடிகள்
நொடிகள் மட்டும் அல்ல கண்ணீரும் கூடதான்!

வெகு தொலைவில் ,
வானம் முடியும் புள்ளியில் ,
மறைந்து போனது பகல் ,
உன்னைப் போலவே!!
முடிந்து போன நம் பயணம் ஒரு பக்கம் ,
தொடர்ந்த உன் நினைவுகள் மறுபக்கம் !
இன்றும் உன் நினைவுக
ளில்..
என்றும் முடிவடையாத பயணமாய் !

Wednesday, January 6, 2010

பிடித்தவைகள் !



காலை நேர பறவைகளின் கூக்குரல் பிடிக்கும் ,
குளிரில் இதமான சூரியனின் ஸ்பரிசம் பிடிக்கும்,
புல்வெளியில் கண்ணயர பிடிக்கும் ,
பனித்துளியை பார்த்து கொண்டே இருக்க பிடிக்கும் ,
உதிரும் பனியில் சூடாய் தேநீர் அருந்த பிடிக்கும் ,
மெல்லதளுவும் காற்றின் வருடல் பிடிக்கும் ,
வெள்ளம் போல கொட்டும் அருவியில் நிற்க பிடிக்கும் ,
கடலில் கால் நனைக்க பிடிக்கும் ,
பௌர்ணமி நிலவை இமைக்காமல் ரசிக்க பிடிக்கும் ,
நட்சத்திரங்கள் கண்ணடிப்பது பிடிக்கும் ,
மழலையின் கொஞ்சும் பேச்சு பிடிக்கும் ,
சிறு குழந்தையின் வருடல் பிடிக்கும் ,
கொட்டும் மழையில் தனியாக நனைய பிடிக்கும் ,
மழையில் நனைந்ததற்கு அம்மாவின் ,
கோபம் கலந்த அன்பு சிணுங்கள் பிடிக்கும் ..
தனிமையில் இசையின் அரவணைப்பு பிடிக்கும் ,
தவறாமல் வரும் நினைவுகளின் வருகை பிடிக்கும் ,
வெட்டவெளியில் ஊஞ்சலாட பிடிக்கும்,
பேசி கொண்டே இருக்க பிடிக்கும் ,
சில தருணங்களில் மௌனம் பிடிக்கும் ,
மௌனத்தின் ஆதிக்கத்தில் கவிதை எழுத பிடிக்கும் ,
நண்பர்களின் அருகாமை பிடிக்கும் ,
நேசிக்கும் உறவுகளின் அன்பு தொல்லை பிடிக்கும்,
உயிரான உறவுகளிடம் கோபம் கூட பிடிக்கும் ,
எனக்கு பிடித்தவைகளை (ப)பிடிக்கும்,
அணைத்து இதயங்களையும் பிடிக்கும் !!

Wednesday, December 16, 2009

கடவுளின் துணை !




பேதமையில் அறிவொழியாய்,
வெற்றியில் உறுதுணையாய் ,
தோல்வியில் ஊக்கமருந்தாய் ,
இருளில் ஜோதியாய் ,
வெயிலில் நிழலாய் ,
அடைமழையில் குடையாய் ,
இடி முழக்கத்தில் சிருஷ்டியாய்,
கண்ணீரில் ஆறுதலாய் ,
சிரிப்பினில் புஷ்பமாய் ,
தனிமையில் பெருந்துணையாய் ,
இதயத்தில் வாசம் பண்ணும் தேவனாய்,
எனக்குள் என்றும் துணையாய் இருக்கிறாய்!

Saturday, December 5, 2009

வாழ்க்கை அழகானது !


முர்களுக்கு நடுவிலும் கூட,
ரோஜா செடி என்றும் அழகு தான் ..
வறண்ட பாலைவனத்திலும் காக்டஸ்
செடி அழகு தான் ..
சுட்டெரிக்கும் சூரியனும்
சுகம் தான் குளிரின் ஆதிக்கத்தின் பொது ..
பாசி படிந்த தண்ணீரிலும் கூட
இலைகளின் தஞ்சம் உண்டு ..
கனியற்ற மரத்திலும் கூட
பறவைகளின் வருகை உண்டு ..
பேய் மலைக்கும் கூட
கடைசி மழைத்துளி உண்டு ..
நம் வாழ்வும் கூட இப்படிதான் ,
நிறைவேறாத கனவுகளும் என்றோ ஒரு நாள் நிஜங்களாகும் ..
சாத்தியமற்ற முயற்சியும் ஒரு நாள் உயிர் பெரும்..
கவலைகளும் முகவரி இன்றி மறையும் ..
வாழ்வின் விழியில் ஒளிந்து கொண்டிருக்கும் அழகை
விழித்து ஆராயுங்கள் ..
வாழ்வை காதலிப்பிர்கள்..
வெறுப்பாய் தோன்றும் வாழ்வும் கூட
இனிமையாய் மாறும் ,
நரகமான தருணங்களும்
சொர்க்கமாய் தோன்றும் ,
வாழ்வின் மீது நாம் கொண்டுள்ள பார்வையை வேறுபடுத்தினால்!

Sunday, November 22, 2009

மழை !


மண்ணின் மீது கொண்ட காதலால் ,
மழை வந்தது !
மழையின் வருகையால்
பூமியின் ஜனனம் இங்கே ,
மேகமோ வீழ்ந்தது
மழையின் பிரிவால் அங்கே,
இப்படி தான் என் வாழ்வும் கூட
நான் வாழ்வதும் வீழ்வதும் உன்னாலே !!