Saturday, January 9, 2010

நினைவுகள்


நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது,
முடிவில்லாமல் ...

நாம் பேசி சிரித்த
நொடிகளுக்கு சாட்சியாய்
நின்ற மரங்கள் !
அதனிடமும் மௌனம் ?!!

நாம் அமர்ந்த சாலையோர இருக்கைகள் ,
நான் தனியே வருவேன்
என அறிந்ததோ என்னவோ?!
அதிலும் ஒரு சேதம் !
நீ இன்றி தனித்து வந்த வருகையை
சற்றும் எதிர்பார்க்காத இருக்கை!!

நாம் சென்ற பாதையில்
நம் சுவாசம் நிறைந்த காற்றில்
இன்று ஒரு வெறுமையை கண்டேன் !
காற்றும் கூட உன் தேடலில்தான்
சுற்றித்திரிகிறது ஓயாமல் !!

நாம் சென்ற போது
இசையை ஒலித்த
பறவைகளின் சப்தம் ,
இன்று அவைகள் கூட
என் செவியில் சோகமாய் !
யாருக்கு தெரியும்?
அந்த பறவைகளின் பேச்சு கூட
நம்மை பற்றியதாக இருக்கலாம் ?!

உன் பார்வை காட்டிய பரிவு,
உன் அன்பில் நனைந்த கோவம்,
உன் புன்னகையில் நிறைந்த உன் மொழிகள் ,
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்,
அனைத்தையும் எண்ணி கரைந்த நொடிகள்
நொடிகள் மட்டும் அல்ல கண்ணீரும் கூடதான்!

வெகு தொலைவில் ,
வானம் முடியும் புள்ளியில் ,
மறைந்து போனது பகல் ,
உன்னைப் போலவே!!
முடிந்து போன நம் பயணம் ஒரு பக்கம் ,
தொடர்ந்த உன் நினைவுகள் மறுபக்கம் !
இன்றும் உன் நினைவுக
ளில்..
என்றும் முடிவடையாத பயணமாய் !

Wednesday, January 6, 2010

பிடித்தவைகள் !



காலை நேர பறவைகளின் கூக்குரல் பிடிக்கும் ,
குளிரில் இதமான சூரியனின் ஸ்பரிசம் பிடிக்கும்,
புல்வெளியில் கண்ணயர பிடிக்கும் ,
பனித்துளியை பார்த்து கொண்டே இருக்க பிடிக்கும் ,
உதிரும் பனியில் சூடாய் தேநீர் அருந்த பிடிக்கும் ,
மெல்லதளுவும் காற்றின் வருடல் பிடிக்கும் ,
வெள்ளம் போல கொட்டும் அருவியில் நிற்க பிடிக்கும் ,
கடலில் கால் நனைக்க பிடிக்கும் ,
பௌர்ணமி நிலவை இமைக்காமல் ரசிக்க பிடிக்கும் ,
நட்சத்திரங்கள் கண்ணடிப்பது பிடிக்கும் ,
மழலையின் கொஞ்சும் பேச்சு பிடிக்கும் ,
சிறு குழந்தையின் வருடல் பிடிக்கும் ,
கொட்டும் மழையில் தனியாக நனைய பிடிக்கும் ,
மழையில் நனைந்ததற்கு அம்மாவின் ,
கோபம் கலந்த அன்பு சிணுங்கள் பிடிக்கும் ..
தனிமையில் இசையின் அரவணைப்பு பிடிக்கும் ,
தவறாமல் வரும் நினைவுகளின் வருகை பிடிக்கும் ,
வெட்டவெளியில் ஊஞ்சலாட பிடிக்கும்,
பேசி கொண்டே இருக்க பிடிக்கும் ,
சில தருணங்களில் மௌனம் பிடிக்கும் ,
மௌனத்தின் ஆதிக்கத்தில் கவிதை எழுத பிடிக்கும் ,
நண்பர்களின் அருகாமை பிடிக்கும் ,
நேசிக்கும் உறவுகளின் அன்பு தொல்லை பிடிக்கும்,
உயிரான உறவுகளிடம் கோபம் கூட பிடிக்கும் ,
எனக்கு பிடித்தவைகளை (ப)பிடிக்கும்,
அணைத்து இதயங்களையும் பிடிக்கும் !!

Wednesday, December 16, 2009

கடவுளின் துணை !




பேதமையில் அறிவொழியாய்,
வெற்றியில் உறுதுணையாய் ,
தோல்வியில் ஊக்கமருந்தாய் ,
இருளில் ஜோதியாய் ,
வெயிலில் நிழலாய் ,
அடைமழையில் குடையாய் ,
இடி முழக்கத்தில் சிருஷ்டியாய்,
கண்ணீரில் ஆறுதலாய் ,
சிரிப்பினில் புஷ்பமாய் ,
தனிமையில் பெருந்துணையாய் ,
இதயத்தில் வாசம் பண்ணும் தேவனாய்,
எனக்குள் என்றும் துணையாய் இருக்கிறாய்!

Saturday, December 5, 2009

வாழ்க்கை அழகானது !


முர்களுக்கு நடுவிலும் கூட,
ரோஜா செடி என்றும் அழகு தான் ..
வறண்ட பாலைவனத்திலும் காக்டஸ்
செடி அழகு தான் ..
சுட்டெரிக்கும் சூரியனும்
சுகம் தான் குளிரின் ஆதிக்கத்தின் பொது ..
பாசி படிந்த தண்ணீரிலும் கூட
இலைகளின் தஞ்சம் உண்டு ..
கனியற்ற மரத்திலும் கூட
பறவைகளின் வருகை உண்டு ..
பேய் மலைக்கும் கூட
கடைசி மழைத்துளி உண்டு ..
நம் வாழ்வும் கூட இப்படிதான் ,
நிறைவேறாத கனவுகளும் என்றோ ஒரு நாள் நிஜங்களாகும் ..
சாத்தியமற்ற முயற்சியும் ஒரு நாள் உயிர் பெரும்..
கவலைகளும் முகவரி இன்றி மறையும் ..
வாழ்வின் விழியில் ஒளிந்து கொண்டிருக்கும் அழகை
விழித்து ஆராயுங்கள் ..
வாழ்வை காதலிப்பிர்கள்..
வெறுப்பாய் தோன்றும் வாழ்வும் கூட
இனிமையாய் மாறும் ,
நரகமான தருணங்களும்
சொர்க்கமாய் தோன்றும் ,
வாழ்வின் மீது நாம் கொண்டுள்ள பார்வையை வேறுபடுத்தினால்!

Sunday, November 22, 2009

மழை !


மண்ணின் மீது கொண்ட காதலால் ,
மழை வந்தது !
மழையின் வருகையால்
பூமியின் ஜனனம் இங்கே ,
மேகமோ வீழ்ந்தது
மழையின் பிரிவால் அங்கே,
இப்படி தான் என் வாழ்வும் கூட
நான் வாழ்வதும் வீழ்வதும் உன்னாலே !!

Wednesday, November 18, 2009

வந்தாய் நட்பாய்!


கேட்காமலே நனைத்துவிட்ட
மழைத்துளியை போல் ,
உதிர்ந்த பின்பும் மரமிடையே
மீண்டும் புதிதாய் பூக்கும் பூக்களை போல் ,
சங்கில் சத்தமின்றி நுழையும்
காற்றை போல் ,
புல்லிதழில் புறப்பட்ட பனித்துளியின்
யாத்திரையை போல் ,
சரிந்த பின்பும் சுவாசம் உட்புக
ஆடும் மரங்களை போல் ,
இதழ்கள் அசைக்காமலே
மனதில் கேட்கும் இசையை போல் ,
ஓசைகள் ஏதுமின்றி ,
அழைப்புகள் ஏதுமின்றி ,
ஆசைகள் ஏதுமின்றி ,
கனவுகள் ஏதுமின்றி ,
எதிர்பாராத புயலாய் வந்தாய் ..
ஒழிந்திருந்த கனவுகள் எல்லாம்
கைகூடி மத்தாளம் போட்டு நிஜங்களாகும் வண்ணம் ,
நிராசைகளெல்லாம் நிறைவேறும் வண்ணம் ,
செவிடானாலும் உன் ஓசைகள் கேட்கும் வண்ணம் ,
கண்ணீரிலும் என் இதழ்கள் சிரிக்கும் வண்ணம் ,
வந்தாய் என் வாழ்வில் நட்பாய்!
வாழ்வை மாற்றினாய் தித்திப்பாய் !
இப்படியே உரைந்திட ஏங்கிடும் ,கனவாய்!
நம் அன்பென்னும் யாத்திரை
என்றும் தொடரும் மகிழ்ச்சியாய்!

Sunday, November 15, 2009


அண்மையில் ஒரு வார இதழில் படித்தேன் ஒரு நிகழ்வை..அதில் என் மனதில் தோன்றிய கவிதை இது ...

நாம் காதாலர்கள் அல்ல
எனினும்
அழிவில்லாத அன்பை பரிமாறிக்கொள்கிறோம் !
உறவின் ஆயுளை நாம் அறியோம்
எனினும் நம் ஆயுளின் எல்லையை கடந்த புரிதலை பகிர்கிறோம் !
மண்ணின் மீது கொண்ட காதலால்,
பூக்கள் உதிர்வதை போல ,
நாமும் பல முறை சருகுகளாய் வீழ்கிறோம் !
இலையுதிர் காலம் என எண்ணி
மறுபடியும் பூக்கிறோம் புதிதாய் !
நம் கவுகள் நிகழ்வுகளாகி,
நிகழ்வுகள் நினைவுகளாகி,
நினைவுகள் முத்திரையாகியும் கூட
பயணிக்கிறோம் ..
நாம் நண்பர்களா ? காதலர்களா ?
என்ற வினாவிற்கு விடை கிடைக்காத புதிராய் !