Friday, February 15, 2013

New Blog

Hi all
It is almost months that I posted something over here.
Am back again with a great urge to write now and then.
I have created a new blog. A kind of blog in a professional way. Need all your support there too. Do visit and leave your comments. You can check out for my new blog here

Saturday, October 13, 2012

Friday, October 5, 2012


உறவுகளில் சுயநலமாய் ஏதோ ஒரு தருணத்தில்  ஆது மனிதர்கள் மாறிவிடுகிறார்கள்.. அதனை அடிப்படையாக வைத்து தோன்றிய கவிதை இது..

இமைகளை துறக்க மறுக்கிறேன்,
கனவில் வரும் நீ கலைந்து விடுவாய்
என்ற பயத்தில்..!

சுவாசிக்க கூட பலமுறை யோசிக்கிறேன்,
எண்ணுள் சேகரித்த உன் மூச்சு காற்றை
தொலைத்து விடுவேன் என்ற பயத்தில்..!

கடுமையாய் வெறுத்த சூரியனை கூட
நேசிக்கிறேன் இன்று,
பிம்பமாய் உன் நிழலை,
என்னுடன் கொண்டு வருவதற்காய்..!

நித்தமும் உறங்குவதற்கு கூட மறுக்கிறேன்,
நிரந்திரமாய் உறங்கி விட்டால் நீ தனிமையாய்
இருப்பாய் என்பதற்காய்..!

எண்ணுள் நினைவு தளும்பும் வரை,
என் நினைவுகள் அனைத்தும்,
நீயாக இருக்க மட்டுமே ஆசை..!

Sunday, May 20, 2012

கனவு

சிறு குழந்தைக்கு 
நடப்பது என்ன என்று புரியாத 
புதிர் கனவு..!

மீண்டும் பெற முடியாத நினைவுகளை 
சுமக்கும் மனிதனுக்கு,
ஏமாற்றம் கனவு..!

நெஞ்சம் நெகிழ்ந்து காதலிக்கும் மனிதனுக்கு,
ஸ்வாரஸ்யம் கனவு..!

எடுத்ததையெல்லாம்  உருவகபடுத்த 
முயற்சிக்கும் பார்வையற்றவனுக்கு,
எண்ணக்கோட்டை கனவு..!

வறுமை தன்  வீட்டு கதவு தட்டாத 
பணக்காரனுக்கு,
நாடகமேடை கனவு..!

ஒரு ஜான் வயிற்றுக்காய்
போராடும் ஏழைக்கு ,
ஏக்கம் கனவு..! 

தன் குழந்தையின் வருகைக்காய்
காத்திருக்கும் கர்ப்பிணி தாய்க்கு,
எழுச்சி அலை கனவு..!

வாழ்க்கை பந்தயத்தில் 
ஓடத் தயாராய் இருக்கும் இளைஞனுக்கு,
ஊக்கம் கனவு..!

எண்ணங்களாய்,
நினைவுகளாய்,
நிகழ்வுகளாய்,
ஸ்பரிசமாய் வரும் கனவுக்காய் நானோ ஏங்கி நிற்கிறேன்!
என் நிகழ கால கசப்பில் இருந்து,
ஒரு பொழுதாது சுதந்திரம் பெற்று ,
சிறகுகளாய் முழைத்து பறவையாய் பறப்பதற்காய்..! 

Wednesday, May 2, 2012

நித்தமும் பலமுறை கூறுவாய்
என்னை நன்கு படித்தது நீ மட்டுமே என்று!
ஆனால் நானோ,
என்னை நீ அறிந்தது அவ்வளவு தான் என்று எண்ணுவேன்!
நான் சிரித்து மட்டுமே பார்த்திருக்கிறாய்
நொடிக்கு கண் சிமிட்டுவது பழக்கமானது போல்,
கண்ணீரிலும் சிரிப்பது பழக்கமாகிவிட்டது!
ஏன் சோக குரல் என்று நீ கேட்கும் ஒவ்வொரு முறையும்,
தெரியவில்லை என்பதே என்
பதிலாய் இருந்திருக்கும்
ஆனால் அதற்கு பின் ஆயிரம் இருப்பது உனக்கு தெரியவில்லை!
இன்னுமா என்னை நினைத்து கொண்டிருக்கிறாய் ?
என்று வினவும் உன் விழிகள் ஒரு பக்கம்,
நான் என்ன பைத்தியமா என்று விடையளிக்கும்
என்
விழிகள் மறுபக்கம்!
இந்த வினா விடை பரிமாற்றத்தில்
அழகாய் நாடகம் ஆடிய என்
விழிகள்
முதல் முறையாய் கண்ணீரை வென்று விட்டோம் என்ற பெருமிதத்தில்!
என்னை நீ நன்கு படித்திருந்தால்,
என்னை விட்டு சென்றிருக்கமாட்டாய்!
விழிகள் நடித்து விட்டன
ஆனால் இதையமோ ஒவ்வொரு துடிப்பிலும்
கேட்கிறது மீண்டும் மகிழ்ச்சியாய் துடிப்பது எப்போதென்று?!

Harry :)


Tuesday, March 13, 2012



துயில் கொண்ட என் விழிகளில்
இமைகள் அசையும் அந்த நொடியில்,
அனுதினமும் கண்முன்னே தோன்றுகிறது
உனது பிம்பமே!

உன் காதலில் நனைந்ததாலோ என்னவோ,
தினம் தினம் என்னை பூரிப்புடன் பார்த்த கண்ணாடியோ
இன்று சோகமாய் பார்க்கிறதே!

கூட்ட நெரிசலில்  சிக்கிக் கொண்டு பயணித்த
பேருந்து பயணம் கூட அன்று சுவாரசியமாய் இருந்தது,
இன்றோ இருக்கையில் பயணிக்கும் சூழல் இருந்தும் கூட
அதிலே ஓர் வெறுமை!

நின்று ரசித்த பறவை சப்தங்களில் கூட
இன்று ஓர் மௌனம்!

நம் பாதம் பதித்த சாலையாவும்
பூக்கள்மீது நடந்தும் கூட,என் கால்களில்
முட்கள் ஊடுருவியவாறு ஓர் வலி!

நான் கேட்பது
நித்தம் உன் அருகில் இருக்கவோ,
முப்பொழுதும் உனது சுவாசத்தில் இருக்கவோ,
போகும் இடமெல்லாம் உன் கரங்களில் இருக்கவோ,
நீ நொடிக்கு பலமுறை பரிமாறும் பார்வையோ,
நீ முனுமுனுக்கும் சிணுங்கலோ இல்லை...

உன் கல்லறையில் தவிக்கும் என் நினைவுகளை விடுத்து,
மீண்டும் ஒருமுறை நிகழ்வாய் என் முன்னே நீ வரவேண்டும் என்பதே!
உனது சுவாசத்தை தேடுகிறேன்,
நிற்கப் போகும் என் இதயத்துடிபிற்கு
உயிர் கொடுப்பதற்காய்!!