Sunday, September 20, 2009

காதல் !




காதலை சொல்ல தவித்த நாட்கள் அவை
சொல்ல தைரியமின்றி ,,,

அலைகளை அனுப்பினேன்
அலைகளும் உன்னை பார்த்து
சொல்ல முன்வந்து வந்து பின் வாங்கின

சரி என்று

மேகத்தை அனுப்பினேன்
மேகமும் உன்னிடம் காதலை சொல்ல முடியாமல்
மழையாய் பொழிந்தது

சரி என்று

புறாக்களை அனுப்பினேன்
புறாக்களும் உன்னை தவிர வேறு எல்லா இடத்துக்கும்
பறந்தது

சொல்ல வார்த்தைகள் இன்றி
தவித்து கொண்டிருந்தேன்

ஒரு நாள் தைரியம் பிறந்தது
ஒரு மேகம் சூழ்ந்த நாளில்
உன்னை நோக்கி
உன் பாதைகளை
பின் தொடர்ந்து
நடந்து வந்தேன்

நடந்து கொண்டிருக்கும் வேளையில்
சற்றென்று மழை பெய்தது ...

நீ திரும்பி பார்த்தாய்
நீ என்னை அழைத்தாய்
மழை நம்மை குடைக்குள் இணைத்தது...

இடி நம் கரங்களை
இருக்க பிடிக்க செய்தது ..

மழைக்கு நன்றி கூறிய வாறே
எப்படி சொல்ல என்று
யோசித்து கொண்டிருந்த வேளையில் ,,,
நீ சற்றும் பதறாமல்
பயபடாதே என்று உன் அழகிய குரலில் கூறினாய்

நம் நடை பயணம் முடிவடையும் வேளையில்
அன்றும் சொல்ல முடியாமல் போனதே
என்று எண்ணி உன்னை பார்த்தேன்

நீ சிறிய மௌனத்திற்கு பின்
நம் காதலை இணைத்த மழை மீண்டும்
வர ஆசை என்று கூறினாய்..
அப்போது தான் உனக்குள்ளும் காதல் இருந்ததை உணர்ந்தேன் ...

நீ சொன்னதை கேட்டதும் இன்ப அதிர்ச்சி
வாகனங்களின் சப்தம் கூட இசையாய் ஒலித்தது ...

வீடு திரும்பியதும் , ,,
அன்றைய பொழுது முடிவதில் ஏனோ தயக்கம்
உறக்கத்தில் கண்களை மூடினேன்
ஆகினும் இதய துடிப்பு உனக்காகவே துடித்தது ...

அப்போது உணர்ந்தேன்
சொல்ல மறந்த காதல் ஆகிவிடுமோ
என்று தவித்த வேளையில் ,,,
சொன்னால் தான் காதல் என்பதை
அறிந்திருந்தால்
இன்னும் அதிகம் நாள்
உன்னுடன் காதல் வாழ்வில் வாழ்ந்திருக்கலாமே என்று !!

வாழ்க்கையை காதலிப்போமே!




அன்றாட வாழ்வில்
விழிக்க மறுக்கும் விழிகளுடன்
போராட்டத்தை வென்று
இமைகளை துறந்து,
மீண்டும் ஒரு புதிய நாளின் பயணத்தில் ,
பார்வையில் ஒரு புதிய தேடல்,
கால்களில் புதிய ஓட்டம்,
மனதினில் பலவித வாக்குவாதங்கள்
என நாட்கள் நகர்கிறது ..
இத்தனை பரபரப்பில்
இயற்கையின் அழகு,
சூரியனின் வருகை ,
பூக்களின் மலர்ச்சி,
வயல்வெளியின் பசுமை ,
சாலையோர பூக்கள் ,
மெருகூட்டும் மலைச்சாரல் ,
மெல்லத்தலுவும் தென்றல் ,
பறவையின் ஓசைகள் ,
பூக்களின் மொழிகள் ,
மேககூடங்களின் ஒற்றுமை ,
கோவில் மணி ஓசை ,
வானவில்லின் வண்ணச் செழிப்பு ,
வண்ணத்து பூச்சியின் அழகு ,
மழலையின் சிரிப்பு ,
முகம் தெரியாதவர்களின் புன்னகை ,
எதிர்பாராத சந்திப்பு ,
சூரியன் மறையும் போது இன்னொரு நிற வானின் பிறப்பு,
நிலவின் சிரிப்பு ,
கண்ணடிக்கும் நட்சத்திர கூட்டங்கள் ,
அபூர்வமாக தோன்றும் வான வேடிக்கைகள் ,
வாழ்வின் அழகு தான் எத்தனை ?!?!?!
வாழ்வின் அழகிய தருணங்கள் இவை தானோ?
நின்று பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருக்கிறோம் ...
அழகை ஆராதிக்க ,
இயற்கையை வர்ணிக்க ,
ஒரு நொடி உலகம் நின்றது என எண்ணி
திரும்பி பார்ப்போமே!!
உயிரோடு இருக்கும் இந்த பிரபஞ்சத்தில் ,
வாழ்கையை காதலிபோமே !!
சில நோடிகலாது துக்கங்களை மறந்து !!

Thursday, September 17, 2009

எப்படி உணர்த்துவேன்?!




இமைக்க மறுக்கும் என் இமைகளுக்கு
எப்படி புரியவைப்பேன்
கண்ணுக்கு எட்டும் தொலைவில் ,
நீ இல்லை என்பதை !!
என் துயிலைக் கெடுக்கும்
கனவுகளுக்கு
எப்படி புரிய வைப்பேன்
நினைவுகளில் தொலைத்ததை
கனவுகளில் மீட்க முடியாதென்பதை !!!
நீ பேசிய வார்த்தைகளை
சேகரித்த செவிகளுக்கு
எப்படி உணர்த்துவேன்
அவை தொலைந்து போன சொற்கள் என ?!!
துடித்து கொண்டே இருக்கும்
என் இதயத்திற்கு
எங்ஞனம் கூறுவேன்
அதன் ஆயுள்காலம் முடிந்து விட்டது என்பதை !!
நிகழ்வுகளை மறக்க நினைக்கிறேன்
இவைகளோ மறப்பதை மறுக்க நினைக்கிறதே !!



Sunday, September 13, 2009

படித்ததில் பிடித்தது-இமைகளை மூடாதீர்கள்





நான் இறந்த பிறகு
என் இமைகளை
மூடிவிடாதீர்கள் !
திறந்தே வையுங்கள்
அவள் வந்தாலும் வருவாள்
என் இறுதி ஊர்வலத்தைக்
காண்பதற்கு !
ஒரு சமயம் அவள் வந்தால்
விலகி நில்லுங்கள்
என் விழிகளில் விழும்
இறுதி பிம்பம்
அவளுடையதாய் இருக்கட்டும் !

Friday, September 4, 2009

நீ வருவாய் என!!

நீ சென்ற வழிபாதையில் ,
என் விழிப்பயணத்தை
தினம் தொடருகிறேன் !!
நீ எப்போது மீண்டும் வருவாயென்று!
விழிகளுக்குஉள்ளே போராட்டம் இமைக்கலாம வேண்டாமா என ?
ஏனெனில் இமைக்கும் பொழுது
ஒரு வேளை நீ வந்து மறைந்து விட்டால் ?!!
இமைக்க மறுக்கும் விழிகளின் தாக்கத்தில் !!!

natpu!!







Thursday, September 3, 2009

அம்மா






கருவறையில் உயிர் கொடுத்தாய் ...
உன் கருவிழியில் என்னை நிறைத்து ...
கண்களை காக்கும் இமைகளாக உள்ளாய் ..
உன் அன்பு கவலைகளை ,
சுவாசிக்க மற்றும் அல்ல
நேசிக்கவும் கூட தான் கற்று கொடுத்தது ....
தாயில் சிறந்ததோர் கோவில் இல்லை
என்று சொல்வார்கள் ,
என் கண் கண்ட தெய்வம் நீ தானே அம்மா !!
உன் கரம் கோர்த்து நடை பயின்றேன் ,
என் சுவாசம் என்னை விட்டு பிரிய பயிலும் வரை,
என்றென்றும் இருப்பேன் உன்னுடன் ..
என்றும் மாறாத என் அன்புடன் !